பக்கம்:விஷக்கோப்பை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

53


சி. பி. சிற்றரசு 53 நீங்கள் கோபப்படுவீர்கள், அவர்களையும் அழைத்து எனக்களித்ததைப்போல மரண தண்டனை அளித்து விடலாமா, என்று நீங்கள் நினைக்கக்கூடும். அப்படி நீங்கள் செய்ய எண்ணினல், பெரிய தவறுதலைச் செய்தவர்களாவீர்கள். தான் சாக மருந்துண்ட கதைபோல முடியும். அது உங்களுக்குத் தொடக்கத் தில் எளிதாகத் தோன்றிலுைம், இறுதியில் நீங்கள் செரிக்க முடியாத வேதனையாகத் தோன்றும், விளைவுகள் வேருகவும் வினைகள் விபரீதமாகவும் முடியும். அதனால் உங்களை நீங்களே தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அது நீங்கள் என்றென்றும் பெற முடியாத பரிசாக இருக்கும். உங்கள் வருங்கால சந்ததிகள், உங்கள் கல்லறையைப் பார்த்துக் கேலி செய்யாமல் இருக்கும். ஒருவன் இறந்தபிறகு அவன் ஆவி எங்கும் பேய், பிசாசு, பூதங்களாகத் தொங்கிக் கொண்டிருப்பதில்லை. அவ ன் உயிரோடிருக்கும் போது செய்த நன்மை தீமைகள்தான் என்றென்றும் உலகத்துக்கு அவனே அறிமுகப்படுத்திக் கொண்டிருக் கும். ஒருவன் தன் அறிவினலோ, மற்ருெருவன் தன் ஆராய்ச்சியினலோ, வேருெருவன் தன் வீரத்தாலோ, பிறிதொருவன் தான் செய்த பொதுப்பணியாலோ இன்னொருவன் தான் செய்த தருமத்தாலோ தான் உலகுக்கு அறிமுகம் ஆகவேண்டும். இதுவரை உலகத்தில் எண்ணத் தொலையாத கோடிக்கணக்கான வர்கள் இறந்துபோயிருக்கின்ருர்கள். அவர்களைப் புதைத்த இடமும் புல் முளைத்து அடையாளந் தெரி யாமல் மறைந்திருக்கின்றது. ஆனால், உலக வரலாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/58&oldid=1331441" இலிருந்து மீள்விக்கப்பட்டது