பக்கம்:விஷக்கோப்பை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

விஷக்கோப்பை


54 விஷக்கோப்பை

றில் காணப்படுபவர்கள் - ஒருசிலர்தான் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. பல்லக்கு ஏறுபவனை உயர்ந்தவனென்றும், அவனையும் அவன் ஏறியிருக்கும் பல்லக்கையும் சுமந்து செல்பவனைத் தாழ்ந்தவனென்றும் நெடுநாட்களாக உலகம் கொண்டிருக்கின்ற எண்ணத்துக்கு நான் முற்றிலும் மாறுபட்டவன். ஏனென்ருல், பல்லக்கு ஏறுபவன் தனக்கு இரண்டு கால்கள் இருந்தும் நடக்க முடியாத சோம்பேறியாகின்ருன். தன்னைச் சோம் பேறி என்று உலகம் கேலி செய்யக்கூடாதே என்பதற். காக, ஏதேதோ கருத்துக்கொவ்வாத பொய்களை மக்களுக்குப் புரியாதவகையில் கடினமான சொற்களைக் கொண்டு பின்னிய வலையில் மக்களை மாட்டி விடுகின் முன். அந்த சோம்பேறியையும் தூக்கிக்கொண்டு, தானும் நடந்துகொண்டு கஷ்டப்படுகிற அந்த உழைப்பாளியையே நான், தியாகி, உயர்ந்தவன் என் கிறேன். இதைப்போலவே நீங்கள் அறியாமையால் கொண்டிருக்கின்ற கருத்துக்கள் அனைத்துக்கும் நான், புதுத் தத்துவங்களை சொன்னேன் என்பதற்காகவே நான் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக் கின்றேன். உதாரணமாக, பொய் என்ற வார்த்தையின் உண்மையான தத்துவத்தைத் தெரிந்துகொள்ளாமல், பொதுவாகப் பொய் என்ற வார்த்தை கெட்டது. என்று சொல்லிவிடக் கூடாது. ஏனெனில், ஒரே பொய் என்ற வார்த்தை, சில இடங்களில் நன்மையை யும் உண்டாக்குகின்றது. ஆதலால், பொய் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/59&oldid=1331442" இலிருந்து மீள்விக்கப்பட்டது