பக்கம்:விஷக்கோப்பை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி ஷ, க் கோப் ைப அறிமுகம் ஏதென்ஸ் நகரக் கலைக்கோயிலின் தலைவாயிலிலே கம்பீரமாக நிற்கின்ருன் ஒர் தத்துவஞானி. தலை சிறந்த தர்க்கவாதி, தன்னைத்தானே அறிந்து, தான் அறிந்ததை அகில உலக மக்களறிய ஆவல்கொண்டு, அறிவுத் தாகத்தால் அலேந்துகொண்டிருந்த இளைஞர் களின் இருதயத்தைத் தொட்டு, அவர்கள் மனவிருளை நீக்கி ஒளி பரப்பிய அறிஞன். அவனுக்கு முன்னும் அப்படி ஒருவன் பிறந்ததில்லே. அவனுக்குப் பின்னும் அப்படி ஒருவன் இதுவரைத் தோன்றவில்லை. இனி எப்போதாவது தோன்றுவான என்பதும் ஐயமே. எக்காலத்திலும் இறந்துவிடாததோர் இலட்சியத் திற்காக, இறப்பதை இன்பம்ாக ஏற்றுக்கொண்ட சிந்தனையாளன். தீராப்பழி தன்மேல் சுமத்தப்பட்ட போதும், நயவஞ்சக சர்க்காரால் நச்சுக்கோப்பையை தனக்களிக்க வேண்டுமென்ற தீர்ப்பைப் பெற்ற போதும், தன் கொள்கையில் மாளாத அன்புகொண்டு கையிலே நஞ்சையும், நெஞ்சிலே வீரத்தையும் ஏந்தி மாண்ட மாவீரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/6&oldid=910697" இலிருந்து மீள்விக்கப்பட்டது