பக்கம்:விஷக்கோப்பை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

55


சி. பி. சிற்றரசு 55 வார்த்தைக்கு நாம், எப்படி ஒரு பொது அர்த்தத் தைக் கற்பிக்க முடியும். எடுத்துக்காட்டாக ஒன்று சொல்கிறேன். பொய் சொல்லும் அவ்வளவுபேரும் கெட்டவர்கள், என்பீர்கள். அப்படியானல், பொய் கூறித் தன் படைக்கு ஊக்கமளிக்கும் தளபதியும், பொய் கூறித் தன் மக்களுக்கு மருந்துTட்டும் தாய் தந்தையர்களும், வெறியேறி தற்கொலைபுரிய எண் னும் தன் நண்பனிடம் உள்ள கூறிய கத்தியைப் பொய் சொல்லி வாங்க எண்ணும் மனிதனும் கெட்ட வர்களா? ஆகவே அந்தந்த சொல்லின் பயன். அது பயன்படுத்தப்படுகிற இடம், அதனால் ஏற்படுகிற விளைவு ஆகியவைகளை அனுசரித்தே ஒரு வார்த்தை யின் உண்மை நிலைமை இதுவென நாம் க ண் டு கொள்ள முடியும், அந்த ஆராய்ச்சியில் ஈடுபட என் மனம் என்னைத் தூண்டியது. நான் இதுவரையிலும் என் மனம் எதைச் செய்யச் சொல்லித் தூண்டியதோ, அதையே செய் திருக்கின்றேன். என் மனசாட்சிக்கு விரோதமாக நான் எதையாவது செய்யத் தொடங்கியபோதெல் லாம் என் மனம் தடுத்திருக்கிறது. இயற்கையாகவே சாகப்பிறந்த ஒருவனைப் பார்த்து எந்த அதிகாரத் தொனியாகிலும், 'நீ முன்பே இறந்துபோ,’ என்று இடும் கட்டளையை ஏற்க மறுக்கும் எவனும் கோழை தான். சாவுக்கஞ்சுகிற ஒருவனைச் சாதாரண மனிதன் என்றுகூட நான் ஏற்றுக்கொள்வதில்லை. அப்படி அஞ்சி அஞ்சி வாழ்கிற ஒருவன் பலமுறை இறந்து இறந்து பிழைக்கிருன். சில நேரங்களில் நடைப்பினமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/60&oldid=1331443" இலிருந்து மீள்விக்கப்பட்டது