பக்கம்:விஷக்கோப்பை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

விஷக்கோப்பை


56 விஷக்கோப்பை

விடுகிருன். நமது முன்னேர்களான பலாமிடஸ், அஜக்ஸ், டெலெமோன் என்பவர்கள் எல்லாங்கூட அநியாயமான தீர்ப்பால் இறந்துவிட்டவர்கள்தான். சோலன், கைலோ, பிட்டேயியஸ், பியஸ், பெரியாண்டர், எபிமினிட்ஸ், க்ளிடேபாபூலஸ் என்பவர்களெல்லாங் கூட, 'உன்னை அறி வினையை நினை, சமயமறி, உலகில் அனேகர் தீயோர்கள், உழைப்பில்ை ஆகாத தொன்று மில்லை, அமிதம் விலக்கு” என்ற பொன்மொழிகளைச் சொல்லிச் சொல்லி மாண்டு போனவர்கள்தான். நம் நாட்டு மக்களால் போற்றப்படுகிற அத்தேன என்ற பெண் தெய்வத்திற்குப் பொன்னலும் தந்தத் தாலும் சிலை செய்த சிற்பியும், ஜாஸ் என்னும் தெய்வத் திற்கு அழகான சிலை செய்த பிடியாஸ் என்ற சிற்ப ஞானியும் இறுதியில் அநியாயமான பழிகள் சுமத்தப் பட்டுச் சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மாண்டு போளுர்கள். தான் ஆண்ட காலத்தைத் தங்கமான காலம் ” என்று கண்டோர் புகழ, ஏதன்ஸை பல வழிகளில் சிறக்கச் செய்த பெரிக்ளஸ் என்ற அரசன் அந்தியத்தில் மானமழிந்து மாண்டுபோனன். அந்தச் சந்ததியின் வழிவந்தவர்கள் யாரும் இல்லையே என்று அந்த புனிதவான்களின் கல்லறைகள் கண்ணிர் சிந் தாமல் இருக்க நான் அவர்கள் மத்தியிலேயே அமரப் போகின்றேன். ஆகையால், நீதிமான்களே ! நீங்களும் வீரத் தோடு சாக எண்ணுங்கள். அது உங்கள் தூய்மை யான எண்ணத்தின் முடிவாக இருக்கட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/61&oldid=1331444" இலிருந்து மீள்விக்கப்பட்டது