பக்கம்:விஷக்கோப்பை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

விஷக்கோப்பை


60 விஷக்கோப்பை

நீதிமன்றம் : இல்லை, இல்லை. சாக்ரடீஸ் நீங்கள் வேண்டிய் நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். சாக்ரடீஸ் : மெத்த மகிழ்ச்சி, ஏதன்ஸ் நகர மாந்தர்களே! நான் ஏன் அரசியலில் ஈடுபடவில்லை என்று பல நாட்களாகப் பலர் கேட்டார்கள். நான் அரசியலிலே ஈடுபட்டிருந்தால் என்றைக்கோ இறந் திருப்பேன். அதனால் நம்மில் யாருக்கும் நன்மை இல்லை. நேர்மைக்காகப் போராடுகிறவன் சிறிது காலமே வாழ்வதாயிருந்தாலும் தனிப்பட்ட ஒரு சிறப்பே போதும். அவையில் அந்த சிறப்பு வேண்டியதில்லை என்று எண்ணியவன் நான். வெகு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன். நீதிமான்களே! நான் ஆண்டியோகிஸ் மரபைச் சேர்ந்தவன். நான் வகித்த ஒரே ஒரு பதவி மேல்சபை (செனேட்) உறுப்பினன் பதவிதான். ஆர்க்கினுசே போர் முடிந்ததும் அதில் இறந்தவர்களுடைய சடலங் களே எடுத்து வராததால் ப ைட த் தலைவர்களை விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள். அது சட்டத் துக்கே விரோதமானது என்று நான் ஒருவன்தான் எதிர்த்து வாக்களித்தேன். மற்ற உறுப்பினர்கள் என்ன சிறையிடுவோம் என்று பயமுறுத்தினர்கள். அப்போது, சட்டமும் நீதியும் நம் பக்கம் இருக்க சிறைவாசத்துக்கும் அநீதிக்கும் அஞ்சி அநீதியான செயலில் பங்கு கொள்வதாவது! என்று துணிவோடு இருந்தேன். இது நடந்தது பழைய ஜனநாயக ஆட்சி காலத்தில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/65&oldid=1331448" இலிருந்து மீள்விக்கப்பட்டது