பக்கம்:விஷக்கோப்பை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

விஷக்கோப்பை


64 விஷக்கோப்பை

மீண்டுமோர்முறை உறுதிப் படுத்தி விட்டார்கள்.) சாக்ரடீஸ், கலகலவெனச் சிரித்தான். ' இவை யெல்லாம் வீண் சடங்குகள் என முன்னமே சொன் னேன். கோபப்பட்டீர்கள். ஒரு மைன வெள்ளிதான் என்னிடம் உள்ளது என்றேன். அப்போதும் கொதித் தெழுந்தீர்கள். என் நண்பர்கள் எனக்காக அபராதம் செலுத்த முன்வந்தார்கள். அவர்களையும் செங்கண் கொண்டு பார்த்தீர்கள். நியாயம் பொதுவாக வழங்குவது ஒன்று. இன்ன விதமான நியாயந்தான் வழங்க வேண்டுமென்று, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாததற்கு முன்பே தீர்மானித்து வைத்துக் கொள்வது ஒன்று. இன்னருக்கு இன்ன விதமான தண்டனையைத்தான் வழங்க வேண்டு மென்று நினைத்து, குற்றத்தைப் பின்னல் தள்ளி விடுவது ஒன்று. நியாயத்தை ஒரு தட்டிலும், தன் செல்வாக்கை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்துப் பார்த்து நீதி வழங்குவது ஒன்று. தனிப்பட்ட முறை யிலே ஏற்படுகிற மனஸ்தாபங்களை தனக்கு நீதி மன்றத்தில் இடம் கிடைக்கும் நேரம் பார்த்து வஞ்சந் தீர்த்துக் கொள்வது ஒன்று. குற்றவாளி சொல் வதைத் தான் தெரிந்து கொள்ள முடியாத குறைமதி யால் தண்டனை தந்துவிடுவது ஒன்று. தண்டனை யேற்றவன் மாண்ட பிறகு தன் செய்கைக்கு வருந்திக் கண்ணிர் மல்குவது ஒன்று. ஆக இத்தனை விதங் களில் எனக்களித்த மரண தண்டனை எந்த விதத்தைச் சேர்ந்ததாயிருந்தாலும் நான் கவலைப்படவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/69&oldid=1331452" இலிருந்து மீள்விக்கப்பட்டது