பக்கம்:விஷக்கோப்பை.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 விஷக்கோப்பை இடியும் மின்னலும் நிலநடுக்கமும்போல, எதிரி களும் எத்தர்களும் பொருமையால் தன்னை வாய்ப் போருக்கழைத்தபோதும், இடம்விட்டுப் பெயராமல் இடம்பர்களின் வாதத்தை விலாமுறிய அடித்த வாதகேசரி. - இயேசு தோன்ருத காலம், நபிகள் பிறக்காத காலம், சமண மத சாயல் படியாத நேரம், புத்தர் பொன்மொழிகளை பூதலமறியாத காலம், சீனத்தில் டாயஸ் மதம் தோன்ருத காலம், மகான் கன்பூவியஸ் தோன்ருத காலம், குருநானக் என்பவரால் சீக்கிய மதம் தோன்ருத காலம், மகாவிருடபர் என்பவரால் சைனமதம் தோன்ருத காலம், அதாவது இன்றைக்கு 2421 ஆண்டுகட்கு முன்பு, ' கிரீசின் கண் ” என்று உலக மக்களால் போற்றப்பட்ட ஏதன்ஸை சிற்பக் கலையால் சிறப்பிக்கச் செய்த பிடியாஸ் என்ற சிற்ப ஞானி, தான் அழகுபடச் செய்த சி. ற் பங்க ளின் மெளனத்திலேயே மறைந்துவிட்ட காலம். . 'நான் கல்லுக்கும் மண்ணுக்கும் பிறக்கவில்லை. ஒரு பெண்ணுக்குத்தான் பிறந்தேன் ’ எ ன் று சொன்ன பேரறிஞன் நெகன் எனும் பெருமகன் தோன்றுவான் எ ன் றே நி னே க் கா த காலம், சாவென்பதே இன்னதென்றறியாத போது சாவையே நினைத்து நினைத்து அழுதுக்கொண்டிருந்த காலம். காலம் எனும் புயல் நாதத்தைக் கனவேகமாக ஒட்ட அதை அறியாதவர்கள் காலத்தை ஒட்டுவது எப்படி என்று கவலையிலாழ்ந்திருந்த நேரம், பொய்யறிவை

  • அரிஸ்டாடல்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/7&oldid=910708" இலிருந்து மீள்விக்கப்பட்டது