பக்கம்:விஷக்கோப்பை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

விஷக்கோப்பை


68 விஷக்கோப்பை

சிறையிலே காணப்போகும் சாக்ரடீஸ் கவலை தோய்ந்து, முகம் கறுகறுத்து, கைகால்கள் மெலிந்து, குரல் கம்மி, கம்பீரத் தொனியில்லாமல் விதியை நினைத்து வேதனைப்பட்டு, நம்மிடம் பேசுவதற்கும் மனமில்லாமல் இருப்பார். தூரத்திலிருந்தாகிலும் பார்த்துவிட்டு வரலாம் என்று பலர் சென்ருர்கள். ஆனல் சிறையிலே சாக்ரடீசின் தோற்றத்தை முற்றி லும் மாருகக் கண்டார்கள். வெளியிலே சாக்ரடீஸ் உலவியபோது இருந்ததைவிட, மிகத் தேஜசாக, தெளிவாகக், குழப்பமில்லாமல், கம்பீரத் தொனி யோடு, முகமலர்ச்சிகொண்டு நண்பர்களை வரவேற்று. அவர் உரையாடிய முறை மிக விசித்திரமாக இருந்தது. சாக்ரடீஸ் சிறையிலும் ஒய்ந்திருக்கவில்லை. ஈலாப்ஸ் எழுதிய கற்பனைக் கதைகளைச் செய்யுட் படுத்தினர். இடை இடையே சிம்மியாஸ், கெபெஸ், பியோடன் முதலானவர்கள் அடிக்கடிச் சந்தித்து இன்னும் தெரிந்துகொள்ள வேண்டுவதைப் பற்றி உரையாடிச் சென்ருர்கள். நகரில் நகரிலே அபோலோ என்ற தெய்வத்திற்குச் சிறப் பாக விழா நடந்துகொண்டிருந்தது. ம க் க ள் குதுகலக் கடலில் ஆழ்ந்திருக்கின்ருர்கள். ஆனல் சாக்ரடீஸ் மன்னிக்கப்படவேண்டுமென்று வாக்களித்த வர்கள் வீடுகளில் துக்கங் கொண்டாடிக்கொண்டிருக் கின்றனர். சாக்ரடீஸ் வீட்டில் ஒரே அழுகுரல். திருவிழாவில் எங்கு பார்த்தாலும் உரையாடிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/73&oldid=1331456" இலிருந்து மீள்விக்கப்பட்டது