பக்கம்:விஷக்கோப்பை.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

69


சி. பி. சிற்றரசு 69 கொண்டிருக்கவேண்டிய சாக்ரடீஸ் இல்லை. அது அந்த விழாவுக்குப் பெருங்குறைதான். ஒரு விடிை ஓராண்டாக இருக்கக்கூடாதா என்று எண்ணுகின்ற னர் சாக்ரடீஸ் நண்பர்கள். ஓராண்டு ஒரு வினாடி tΙΙΙΤα; இருக்கக்கூடாதா என்றெண்ணுகின்றனர் மெலிடஸ் நண்பர்கள். எனினும் காலம் கயவர்களுக் காகச் சுருங்கியோ, கண்ணியவான்களுக்காக விரிந் தோ போகவில்லை. அதன் முறைப்படியே கழிந்தது. விழாத் தொடங்கியவுடன் ஒரு கப்பலை அலங் கரித்துப் பல பெரிய மனிதர்களை அதில் ஏற்றி டிலோஸ் என்ற தீவுக்கு அனுப்பியிருக்கின்றனர். அது திரும்ப ஒரு திங்கள் ஆகும். அதுவரை மரண தண்டனையடைந்திருந்த யாருக்கும் தண்டனையை நிறைவேற்றக் கூடாதென்பது பொதுவிதி. ஆகவே சாக்ரடீசின் தண்டனையில் தாமதம். இப்படி 29 நாட்கள் உருண்டோடின. 30-ஆம் நாள் அதிகாலை, சிறைக்குள்ளே: நல்ல நண்பன் (இவனை எப்படியாகிலும் த ப் பி க்க வைக்க வேண்டும் என்று நினைத்த நண்பன் கிரீடோ 30-ஆவது நாள் விடிவதற்குள்ளே சிறைச்சாலைக்குள் நுழைந்து விட்டான். ஆனால், கொஞ்சமும் துக்க ரேகைகள் முகத் தில் தோன்ருமல் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கின் முன் சாக்ரடீஸ். அவனே விழிக்கட்டும் என்று எழுப் பாமல் பக்கத்தில் சந்தடியின்றி அமர்ந்துவிட்டான் கிரீடோ. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/74&oldid=1331457" இலிருந்து மீள்விக்கப்பட்டது