பக்கம்:விஷக்கோப்பை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

விஷக்கோப்பை


72 விஷக்கோப்பை

சாக் :-கப்பல் வந்துசேர்ந்த அடுத்த நாளே நான் இறக்கவேண்டும் அல்லவா? கிரீடோ :-ஆம். அதிகாரிகளும் நீதி மன்றத்தார் களும் அப்படித்தான் சொன்னர்கள். சாக் :-இல்லை. இன்றைய மூன்ரும் நாள் தான் நான் இறப்பேன். இது என் மனம் எனக்களித்த கட்டளை. கிரீடோ :-அப்படியானல், என் அருமை நண் பனே கடைசி முறையாக வேண்டுகிறேன். நீங்கள் எப்படியும் தப்பித்துக்கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரை உங்கள் பிரிவு பெரிய பூகம்பத்தை யுண்டாக்கிவிடும். மீண்டும் பெறமுடியாத ஒர் அருமையான நண்பனே நான் மாத்திரம் இழந்துவிட வில்லை. இந்த ஏதன்ஸ் இழந்துவிட்டது. உலகமே இழந்துவிட்டது. ஏன் ? வருங்கால தலைமுறைகள் அவ்வளவும் இழந்துவிட்டது. பலர் இழந்துவிட்டார் கள் என்றே சொல்லவேண்டும். ஏன் ? கிரேக்க நாடே இழந்துவிட்டது. நம்முடைய உண்மையான நட்பைத் தெரிந்துகொள்ளாத சிலர், நான் என்னு டைய பணத்தைச் செலவு செய்தால் உங்களைக் காப்பாற்ற முடியும் என்று எண்ணுகிருர்கள். ஒரு உயர்ந்த நண்பனைவிடப் பணத்தைப் பெரிதென மதிக்கும் கயமைக் குணத்தைவிட மிக மோசமானது உலகத்தில் வேருென்றுமில்லை. நான் உங்களைக் காப்பாற்ற முயற்சித்தேன் என்பதை உலகம் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/77&oldid=1331460" இலிருந்து மீள்விக்கப்பட்டது