பக்கம்:விஷக்கோப்பை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

73


சி. பி. சிற்றரசு 73 நாளும் நம்பப்போவதில்லை. ஆனல் நீங்கள் தப்ப மறுக்கின்றீர்கள். சாக் -நாம் ஏன் உலகத்தின் கருத்துகளுக்காகக் காத்துக்கொண்டிருக்க வேண்டும். நாம் எது சரி என நினைத்தோமோ அதையே செய்திருக்கிருேம். ஆனால், சமூகம் ஒரு நல்ல மனிதனுக்குக் கொடுமை இழைத்து விடவும் கூடும். கொடியவனை நல்லவ னக்கி விடவும் கூடும். உயர்ந்தவனைத் தாழ்த்தித் தாழ்ந்தவனே உயர்த்தி விடவும் செய்யும். சன்மார்க் கனத் துன்மார்க்களுகவும், துன் மார் க்கனேச் சன்மார்க்களுகவும் செய்துவிடும். அரியணையிலிருந்து செங்கோல் பிடித்து நாடாண்டவனை நாடோடியாய்க் கந்தையுடுத்திக் கையில் ஒடேந்தித் திரியும்படி விட்டா லும் விட்டுவிடும். அல்லது கந்தையுடுத்தித் திரிந்த வனைச் சிங்காதனத்தமர்த்திலுைம் அமர்த்திவிடும். குப்பையைக் கோபுரமாக்கி, கோபுரத்தைக் குப்பை யாக்கினலும் ஆக்கும். அல்லது இரண்டையும் செய் யாமல் விட்டாலும் விட்டுவிடும். அதற்காக நான் அஞ்சவில்லை. நாம் மனிதர்களுடைய எல்லா க் கொள்கைகளையும் மதிக்க வேண்டியதில்லை. சில வற்றையே மதிக்க வேண்டும். அதேபோல் எல்லா ருடைய கொள்கைகளையும் மதிக்க வேண்டியதில்லை. சில மேதாவிகளுடைய கொள்கைகளையே மதிக்க வே ண் டு ம். மருத்துவன் நோயாளியின் மன வேதனையை எண்ணினல் வியாதியைக் குணப்படுத்த முடியாது. கேவலம் வாழ்க்கையை மட்டும் நாம் கவனிக்கக் கூடாது. நல்வாழ்க்கையையே நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/78&oldid=1331461" இலிருந்து மீள்விக்கப்பட்டது