பக்கம்:விஷக்கோப்பை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

விஷக்கோப்பை


74 விஷக்கோப்பை

மதிக்க வேண்டும். அஃதொன்றைக் கடைபிடித்தால் போதும், அதனால் நீங்கள் துன்பத்தில் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது. - கிரிடோ : உங்களை நாங்கள் மறைத்துவிடுவதன் மூலம் எங்களை நாங்களே ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்வதுபோலவும் அல்லது நாங்கள் தங்களை அரசாங்கப் பாதுகாப்பிலிருந்து திருடிவிட்டோம் என்ற குற்றம் சுமத்தப்படுவோம் என்றும், அல்லது எங்களுக்கு இது ஒரு பெரிய நஷ்டத்தையுண்டாக்கி விடும் என்றும், அல்லது பெரிய தண்டனையை அனு பவிக்க வேண்டிய சூழ்நிலையில் அகப்பட்டுக்கொள் வோம் என்றும் தாங்கள் கருதினால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் நீர் நினைப்பதைவிட அதிக அபாயத்தில் அகப்பட்டுக் கொள்வதானுலும் கவலைப்படவில்லை. ஆ ைல் தாங்கள் எப்படியும் உயிர் பிழைக்க வேண்டும். சாக் ஆம். நான் அதை ஆழ்ந்து சிந்திக் கின்றேன். கிரிடோ : சிந்திக்க ஒன்றுமே இல்லை. உங்களை வெளியேற்றச் சம்மந்தப்பட்டவர்கள் தயாராக இருக்கின்றனர். என் பொருள் மாத்திரமல்ல, என் உயிரே உங்கள் விடுதலைக்காக. உங்களை வெளி யேற்ற வந்திருக்கும் அவர்களுக்காக நான் ஒன்றும் அதிகமாகச் செலவழிக்கத் தேவையில்லை. என் பனச் செலவைப்பற்றித் தாங்கள் அதிகமாகக் கவலைப்பட்டால், நமது நகரத்தின் விவேகிகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/79&oldid=1331462" இலிருந்து மீள்விக்கப்பட்டது