பக்கம்:விஷக்கோப்பை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

விஷக்கோப்பை


76 விஷக்கோப்பை

தப்பிக்க எண்ணுதது ஆகிய இரண்டையும் அனுசரித் தால் நாம் எந்த நன்மைக்குமே தகுதியற்றவர்களாய் விடுவோம். சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்கும் நேரமும் கடந்துவிட்டது. இனி ஒரே ஒரு வழிதான் உண்டு. அதுதான் சிறையிலிருந்து தப்பிச் செல்வது அதுவும் இன்றிரவே செய்து முடிக்க வேண்டும். சாக் : அன்புள்ள கிரீடோ! உங்கள் முடிவைப் பாராட்டுகின்றேன். ஆனால், நாம் எது சரி என்பதற் காக வாழ்நாள் முழுதும் போராடினேமோ, அந்த நிலையே நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக் கின்றது. இந்த யுகத்தில் உள்ள நீதிமான் களுக்கு என்னைக் கொல்லுவது சரி என்று படுவதால், எக்காலத்திலும் இந்த அநீதிக்கு மாற்றம் வராதா? வருங்காலம், நிச்சயம் தான் கடந்துவிட்ட இறந்த காலத்தை எண்ணி வருந்தவே செய்யும். எவ்வளவு கொடிய அபாயமான இறந்த காலத்தைக் கடந்து வந்திருக்கிருேம் என்பதை எண்ணி எண்ணி அது விம்மி விம்மி அழாமலிருக்காது. - பல போர்முனைகளிலே பயப்படாமல் போரிட் டோம். அப்போதெல்லாம் ஆயுதத்தையும் அஞ்சா மையும் நம்பினேம். பிறகு நீதிமன்றத்தில் அறத் துக்காகப் போராடினோம். அப்போது அறிவைத் துணைக்கழைத்தோம். ஆனால், இன்று சிறையிலிருந்து ஒடக் கோழைத்தனத்தைக் கூட்டாகச் சேர்த்துக் கொள்ளச் சொல்லுகின்றீர்கள். அன்று நாம் கண்ட அஞ்சாமையையும் வீரத்தையும் அறத்தையும் நெஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/81&oldid=1331464" இலிருந்து மீள்விக்கப்பட்டது