பக்கம்:விஷக்கோப்பை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

77


சி. பி. சிற்றரசு 77. சாழத்தின் சமாதியிலேயே அடக்கம் செய்துவிடுவதா? நீரே சொல்லும் இது நேர்மையா என்று. கொள் கையை மற்ருெருவர் அவமதித்து நடப்பது இயல்பு. தீயது செய்தலும், தீமைக்குத் தீமையையே திருப்பிக் கொடுத்தலும், நமக்குக் கெடுதல் செய்த ஒருவனுக்குப் பதில் கெடுதல் செய்து பழிக்குப்பழி வாங்கிக் கொள் வதும், ஒரு போதும் சரியல்ல என்ற கொள்கையில் நின்று நாம் நமது ஆராய்ச்சியை ஆரம்ப மு. த ல் தொடங்கியிருக்கின்ருேம். அதனால் ஏதன்ஸ் நீதி மன்றம் நமக்குக் கெடுதல் செய்யும் நோக்கத்தோடு எனக்கு மரண தண்டனை விதித்திருந்தால் அந்த நீதி மன்றத்தைப் பழிவாங்கும் உணர்ச்சியால் நாமும் தப்பித்தோடி அதைத் தலைகுனிய வைக்கலாமா என்பதை யோசித்துப்பார். நம்மால் கண்ணியப் படுத்தப்பட வேண்டிய நீதிமன்றத்தை நாமே சிதைத்துவிடலாமா என்பதை எண்ணிப்பார். தாயே தான் ஈன்ற சேயைக் கொல்வதைப் போன்ற தல்லவா இந்தச் செய்கை. - கிரிடோ : அதைப் புரிந்து கொள்ளாத மனிதர் களிடம் நாம் சரணுகதியடைவதா? சாக் . இதற்குப் பெயர் சரணுகதியா? தோல் வியை ஒப்புக்கொள்ளுகிற ஒருவனைக் கோழை என் கிறது உலகம். இது பரம்பரைப் பைத்தியக்காரத் தனம், தோல்வியை ஒப்புக்கொள்ளப் பெரும்பண்பு வேண்டும். வீரம் வேண்டும். தோல்வி வெற்றியின் முதல்படி, அனேக நல்ல காரியங்கள் கெடுதலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/82&oldid=1331465" இலிருந்து மீள்விக்கப்பட்டது