பக்கம்:விஷக்கோப்பை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

விஷக்கோப்பை


78 விஷக்கோப்பை

லேயே தொடங்குகின்றன என்பதை நீ அறியாயா? கெட்ட மனத்தால் தூண்டப்பட்ட ஒருவன் செய்யும் தவற்றை ம ைறக் க ஏதேதோ தந்திரங்களைக் கையாண்டு மேலும் மேலும் கெட்டவனாய்விடுகிருன். பாய்மரத்தைக் கிழித்துவிடும் புயல்போல, தான் அழிவதற்கு, முன் அறிவிப்பாக அபாயத்தை விலை பேசுகிருன். அதனால் அறியாமையில் வி ழு ந் து விடுகிருன், எவன் தைரியமாகத் தன் தவறுகளை ஒப்புக் கொள்ள முன் வருகிருனே, அவனே நல்லவர்களின் முன்னேன். நீர் நினைப்பதைப்போலச் சிலரின் உதவி கொண்டு நான் வெளியே ஒடிவிட்டால், உயிரைப் பற்றி நான் கொண்டிருக்கும் கருத்துக்கள் நீதிமன்றத் தில் நானிட்ட வாதங்கள் எல்லாம் காட்டில் காய்ந்த நிலவாக முடியும். நான் சொன்னவைகளை மறுக்க முடியுமானல் மறுத்துச் சொல்லுங்கள் ஒப்புக் கொள்ளுகிறேன். கிரிடோ : உங்கள் வாதத்தை நான் மறுக்க முடியவில்லை. ஆனால், அறிஞரே! எந்த அநீதி உம்மைக் குற்றவாளியாக்கிக் கூண்டில் நிறுத்தி யதோ, எந்த அநீதி உம்மைப் பழிவாங்கச் சில மானிடப் பதர்கள் உருவில் வந்ததோ, எந்த அநீதி உமது அறிவுக் கண்ணுடியில் ஒரு களங்கத்தை யுண்டாக்கியதோ, எந்த அநீதி உமது தத்துவப் பேராற்றலில் ஓர் அவமானக் கோட்டைக்கிற எண்ணியதோ, எந்த அநீதி தனது ஆவேசக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/83&oldid=1331466" இலிருந்து மீள்விக்கப்பட்டது