பக்கம்:விஷக்கோப்பை.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

விஷக்கோப்பை


80 விஷக்கோப்பை

மேல் ஆணையாக என் தாய் நாட்டுக்கு வரக்கூடாது. ஆற்றலின் குன்றே! தத்துவத்தின் துாணே! சிந்தனைச் சுரங்கமே தர்க்கவாத கேசரியே! கிரேக்கத்தின் கலை ஞானக் களஞ்சியமே! ஏதென்ஸ் அளித்த ஏந்தலே! இதோ என் கண்ணிரால் உமது மனக்கொதிப்பைத் தணியச் செய்யுங்கள். எரிமலைபோல் எரிந்துகொண் டிருக்கும் உமது உள்ளத்தின் செந்தி என் கண்ணிரால் சாந்தியடையட்டும். இன்றே இச்சிறைச்சாலையை விட்டு வெளியேறுங்கள். யாரும் கண்டு கொள்ளாத வண்ணம் உம்மை அயல் நாட்டில் சேர்க்கின்றேன். இதோ, எனது செல்வ மூட்டை. இவை எல்லாம் உமது விடுதலைக்கே. இந்த அற்பச் செல்வத்தை மீண்டும் பெறலாம். உம்மைப் பெறவியலாது. மானிடவர்க்கம் மறைந்து மறைந்து தோன்றும். ஆனல் அந்த மானிடவர்க்கத்தின் விலைமதிக்க முடியா மாணிக்கமாகிய தங்களைப் பெறும் ஆற்றல் இவ் வையகத்துக்கு இருக்கப்போவதில்லை. உலகத்தில் ஒரே சூரியன். சந்திரனும் ஒன்று. சாக்ரடீசும் ஒருவர்தான் என்று கதறினன் கிரீடோ. சாக் : (அவன் கண்களைத் துடைத்து) அன்புள்ள கிரீடோ! தாங்கள் என்மேல் கொண்டுள்ள மெய் யன்புக்காக என் மனமார்ந்த நன்றி. நான் உமது சொற்படி வெளியேறினாலும் உம்மைப்போல் சுதந்திர மாக வாழ முடியுமா? கொலைகாரனைப்போல் தலை மறைவாய்த் திரியவேண்டும். அப்போது எ ன் ன சொல்லும் மனம், எழுபதுக்கு மேற்பட்ட தள்ளாத வயதில் ஏதென்ஸ் நீதிமன்றத்தில் தன் வழக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/85&oldid=1331468" இலிருந்து மீள்விக்கப்பட்டது