பக்கம்:விஷக்கோப்பை.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

83


சி. பி. சிற்றரசு 83 வளர்த்ததும், படிக்க வைத்ததும் நாங்கள்தான். நீ இந்த மண்ணில் பிறந்தாய் என்று பறைசாற்றியதும், உனக்குத் தாயக உரிமை வழங்கியதும் நாங்கள்தான். உன் தாய் தந்தையர்கள் எங்கள் முன்னுல் அடங்கி ஒடுங்கி இருந்தது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்க ளாகிலும் எங்களைப்பற்றி நி னே க் க வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. உன் நிலை அப்படி அல்ல. நீ உன்னுடைய பெற்ருேர்களைவிட நீ பிறந்த நாட்டைவிட சட்டங்களாகிய எங்களையே அதிகமாக நேசித்தாய். அதனால்தான் நீ அடிக்கடி வெளியூர்களுக்குப் போனதுமில்லை. நீ போ க விரும்பிய நாடுகளிலுள்ள சட்டங்களைவிட நீ பிறந்த நாட்டின் சட்டங்களாகிய நாங்களே மிகச்சிறந்த வர்கள் என்று நீ எண்ணம் கொண்டு வாளாயிருந்து விடவில்லை. ஊர் அறியச் செய்தாய், உலகமறியச் செய்தாய். நம் தாயகத்தின் இளஞ்சிரார் முதல் வயோதிகர்வரை அனைவர்க்கும் புகட்டிய்ை. ஏன்? சாக்ரடீஸ் மற்ருென்றை உனக்கு நினைவுபடுத்து கிருேம். உன்னைக் குற்றக்கூண்டில்ே நிறுத்தி, உன் குற்றம் நிரூபிக்கப்பட்டபிறகு நீ விரும்பினால் தாயக உரிமையை இழந்து வேற்றுார் செல்லலாம் என்று நீதி மன்றம் உன்னைக் கேட்டபோது. என் உயிருக்கு மேலாக, நான் பிறந்த தாயக மண்ணுக்கு மேலாக என்னை வளர்த்து ஆளாக்கிய சட்டங்களை மதிக்கி றேன், போற்றுகிறேன் என்று மார்தட்டிக் கூறிய நீயா இன்று கோழைபோல் ஒடுகிருய், சட்டங்க ளாகிய நாங்கள் பிழை செய்திருந்தால் எங்கே பிழை பட்டோம் என்று ஊரறிய சொல்ல உனக்கு எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/88&oldid=1331471" இலிருந்து மீள்விக்கப்பட்டது