பக்கம்:விஷக்கோப்பை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

விஷக்கோப்பை


 4 விஷக்கோப்பை

நீதியும் அரசியலும் ஒரு வரையறையின்றி நிலை தடுமாறி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், நீதியை நிலைநாட்ட அரசியல் கருத்துக்களே ஆராய்ச் சிக் குகந்தவை என்று எடுத்தோதியதோடல்லாமல் "மக்களை உணர்வது மக்களின் கடமை” என்ப்தை முதன் முதலில் வெளியிட்ட அறிவுக் களஞ்சியம் தான் ஓர் அரசாங்க ஊழியனுக இருந்தபோதுஞ் சரி, சுதந்திரமாகத் திரிந்தபோதுஞ்சரி, நீதிமன்றத் தில் அங்கத்தினகை இருந்தபோதுஞ்சரி, அதே நீதி மன்றத்தில் அவன் குற்றம் சுமத்தப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட போதுஞ்சரி' எப்போதும் நீதிக்கு விரோதமாக, நேர்மைக்கு மாருக நடக்காத நேர்மை யாளன். “செல்வத்தால் சீலம் வருவதில்லை, சீலத்தால் வேண்டுமானல் செல்வம் வரலாம்”, என்ற தத்து வத்தை தந்தவன், சிந்தனையின் உலைக்கூடமாகத் திகழ்ந்தான் சீலமிக்க சாக்ரடிஸ். தன் அறிவின் மூலம் மக்களைப் புதியதோர் பாதையில் புகுத்தினர். தமது ஆராய்ச்சிக்காக அவர் எடுத்துக்கொண்ட கருத்து ஆண்டவனைப்பற்றியது மாத்திரமல்ல. அன்ருட வாழ்வில் மக்கள் மையத்திலே விளையாடும் சொற்கள், அவர் காட்டிய வழியும், கையாண்ட முறையையும் மிகமிகப் புதியது. " தத்துவத்தை விண்ணுலகினின்று மண்ணுலகுக் கும். கொணர்ந்தவர் சாக்ரடீஸ்" என்று. பெருமிதம் கொள்கிருன் ரோமாபுரி சிசீரோ. 30 ஆண்டுகளாக மக்களோடு உரையாடி தம் அறிவைப் பெருக்கினேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/9&oldid=1331384" இலிருந்து மீள்விக்கப்பட்டது