பக்கம்:விஷக்கோப்பை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

87


சி. பி. சிற்றரசு 87 பேசினலும் அந்த நாட்டுக் குடிமக்கள் அவைகளை ஏற்றுக் கொள்வார்களா? கொள்ளமாட்டார்கள். ஏன் தெரியுமா ? இவைகளெல்லாம் செய்ய இவனுக்கு இவன் பிறந்த நாடு எல்லா உரிமைகள் வழங்கி யிருந்தும் இப்படி உயிருக்குப் பயந்து ஓடி வந்து விட்டானே இவளு அறிஞன். இல்லை, இல்லை இவன் ஒரு சாதாரண மனிதனுக்கும் சமமானவனல்ல என்று தானே அவர்கள் பேசுவார்கள். கிரிடோ : ஒன்றும் பேசாமலிருந்து விடலாமே ? சாக் அது எப்படி முடியும். அதை நாம் இங்கேயே செய்திருக்கலாமே. நாட்டில் பிறந்த ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு க ட ைம உண் டல்லவா? நான் இவ்வளவு நாளாகச் செய்த பணி என் தலையாய கடமை என எண்ணித் துணிந்தேன். மேலும், கிரிடோ! ஒரு நாட்டிலேயே பிறந்த அந்த நாட்டிலேயே வாழ்கின்றவனுக்கும், பிறந்த நாட்டை விட்டு பிற நாடு சென்று குடியேறுபவனுக்கும் உள்ள வேற்றுமை என்ன தெரியுமா ? கிரிடோ : தெரியாது. சாக் : தன் நாட்டிலேயே பிறந்து தன் நாட்டி லேயே வாழ்கிறவன் குடி உரிமை பெற்றவன். கடமையைச் செய்து உரிமையைப் பெறுபவன். தான் பிறந்த நாட்டில் வாழ முடியாமலோ, வாழ விரும் பாமலோ, வாழத் தகுதியற்ருே வெளிநாட்டில் குடி யேறுபவன் குடி உரிமையில்லாதவன். கடமையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/92&oldid=1331475" இலிருந்து மீள்விக்கப்பட்டது