பக்கம்:விஷக்கோப்பை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

விஷக்கோப்பை


8& விஷக்கோப்பை

மட்டிலுமே செய்துக்கொண்டு உரிமையைப் பெற முடியாதவன். இப்போது நீ சொல்லும் முடிவை ஏற்றுக்கொண்டால் நான் தெசாலெ என்ற நாட்டில் கடமையை மட்டிலுமே செய்துக்கொண்டு உரிமை பெறமுடியாதவன். ஆகவே, நான் எங்கே சென்ரு லும் எனக்கு இரண்டாவது இடந்தான் கிடைக்கும். அப்படியே நான் இந்தத் தள்ளாத வயதில் என்ன கடமையை அந்த நாட்டிலே செய்துவிட முடியும். நீயே யோசித்துப்பார். கிரிடோ ! இன்னமும் சொல்கிறேன். நான் பிறப்பதற்கு முன்னும் பின்னும் பிறந்தவர்கள். நான் பிறந்த வெகு நாட்களுக்குப்பிறகு பிறந்த இளைஞர் கள். என்னோடு நேற்றுவரை இருந்தவர்கள். என்னை எங்கும் கண்டவர்கள். நாட்டின் முன்னேற்றப் பாதையிலே என்னோடு கைக்கோர்த்து வந்தவர்கள் ஆகிய இவ்வளவு பேர்களுக்குமே நான் சொன்னவை க்ளைக் கேட்டு சகித்துக் கொண்டிருக்க முடிய வில்லையே. என்னைப் பற்றி ஏதோ சிறிது தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் பிற நாட்டார் எப்படி சகித்துக் கொண்டிருப்பார்கள் சொல் கிரிடோ. அங்கே இளைஞர்களைக் கெடுத்து விட்டாய் என்று தானே மரண தண்டனை விதித்தார்கள். நல்லதை தீயதென்றும், தீயதை நல்லதென்றும் உன் சொல் வண்மையில்ை நாட்டிய்ை என்றுதானே மரண தண்டனை யளித்தார்கள். ஏதென்ஸ் நகர மக்கள் தொழும் கடவுள்களைத் தொழாமல் நீ ஒரு புதுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/93&oldid=1331476" இலிருந்து மீள்விக்கப்பட்டது