பக்கம்:விஷக்கோப்பை.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

89


சி. பி. சிற்றரசு 89 கடவுளைத் தொழுதாய் என்றுதானே மரண தண்டனை யளித்தார்கள். விண்ணைப் பற்றியும், மண்ணைப் பற்றியும் ஆராய்ந்தாய் என்றுதானே உனக்கு மரண தண்டனை யளித்தார்கள். நீ தூய்மையான வீரன யிருந்தால் என்ன செய்ய வேண்டும். அதைக் கண்ணியமாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இங்கே ஒடி வந்துவிட்டாயே. நீ எங்கள் நாட்டை எட்டிப் பிடிப்பதற்கு முன்பே உன் நாட்டு எல்லையிலேயே அகப்பட்டுக் கொண்டாய் என்று வைத்துக்கொள் என்ன நடக்கும். ஒகோ மரண தண்டனை தானே! அதுதான் முன்னமேயே கிடைத்து விட்டதே அதற்குமேல் என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்ற தைரியமா? என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம். சொல் கிரிடோ, சொல். கிரிடோ : தள்ளாத வ ய தெ ன் கி றீர்க ள். செழுமை நிறைந்த தத்துவத்தை தந்தீர்கள். உங்க ளுக்குக் குடும்பம் உண்டென்பதையும் ஒப்புக் கொண்டீர்கள். இன்னும் வாழ வேண்டிய சிறிது காலமாகிலும் வாழலாமே என்பதுதான் என் ஆசை. உங்களிடமிருந்து இன்னும் எவ்வளவோ தத்துவத்தை எதிர்பார்க்கிறது அதையும் சொல்லிவிட்டுப் போகக் கூடாதா. t - சாக் இல்லை. நான் எவ்வளவு .ெ சா ல் ல வேண்டுமோ அந்த அளவுதான் தெய்வம் எ ன் னே அனுமதித்தது. இனி என்னிடம் இந்த நாடோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/94&oldid=1331477" இலிருந்து மீள்விக்கப்பட்டது