பக்கம்:விஷக்கோப்பை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

விஷக்கோப்பை


90 விஷக்கோப்பை

நீங்களோ எதையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதன் முடிவுதான் இது என்று கருதுகின்றேன். ஆகவே, இனி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்! என் பிரிவுக்காற்ருது வருந்துகிறீர்கள். அந்தத் துக்கத்தில் உங்களை நீங்களே மறந்து விடுகின்றீர்கள். இது சாதாரணமாக ந ண் படர் க ள் ஒருவருக்கொருவர் கொள்ள வேண்டிய நட்புதான், எனினும் ஆவேச மிகுதியினலே நாம் கடமையை மறந்துவிடக்கூடாது. நெருக்கடியான நேரத்தில் மெளனமாயிருப்பவன் நயவஞ்சகன் என்று சொல்வதைப்போல் நமது நாட்டில் அறிவுக்கே ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அந்த நேரத்தில் நாம் மெளனமாயிருக்கவில்லை. நமக்கு எது தெரிந்ததோ, அதை. எது சரி என்று பட்டதோ அதை, எது தேவை என்று உணர்ந் தோமோ அதை, எந்த நெருக்கடியிலும் சொல்லியே தீர்வது என்று கருதினேமோ அதை ஒளிவு மறை வில்லாமல், எந்த ஊதியத்தையும் எதிர்பாராமல் சொல்லியிருக்கின்ருேம். அதன் காரணமாக எனக்குக் கிடைத்த பரிசு மரண தண்டன. நெடு நாட்களாக இந்த நாடு கொண்டிருந்த தவருண எண்ணத்தை மாற்றியமைக்க வேண்டுமெனக் கருதினேன் என்பதே குற்றமாகக் கருதி விட்டது. அந்த குற்றத்தின் பசி தீர நான் குருதி சிந்த வேண்டியதே முறை கிரிடோ! நீ ஏன் இதை உன் உரிய நண்பனுக்குக் கிடைத்த பரிசாய் எண்ணுமல் மரணம் என்று கருதிய்ை. நான் தான் ஏன் அப்படி நினைக்க வேண்டும். மற்றவர்கள் தான் ஏன் அப்படி நினைக்க வேண்டும். இவைகள் எல்லாம் எண்ணத்தின் சாயல்களே தவிர வேறல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/95&oldid=1331478" இலிருந்து மீள்விக்கப்பட்டது