பக்கம்:விஷக்கோப்பை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

91


சி. பி. சிற்றரசு 31 நீ இப்படி தான்தோன்றியாக வந்து, எங்களே (சட்டம்) யும் அரசாங்கத்தையும் அழித்துவிடப் பார்க்கிருயே. தனி மனிதர்கள் இப்படி சட்டத்தைப் புறக்கணித்து மிதித்து அவமதித்தால் சட்டப்படி செய்த முடிவுகளுக்குச் சக்தியில்லாமல் போளுல் அந்த மாதிரி ஒரு அரசாங்கம் அப்படியே அழியாமல் இருக்குமென்று கருதுகிருயா? ஆகவே வாக்குவண்மை கொண்ட எவரும் சட்டத்தின் சார்பாக எவ்வளவோ பேச முடியும். உன்னே நாங்கள் அழிப்பது சரிதான் என்று நாங்கள் எண்ணில்ை நீயும் பதிலுக்கு எங்களையும் உன்னுடைய நாட்டையும் அழிக்கும் உரிமை உனக் குண்டு என்று சொல்லி விடுவதா? மகா உத்தமன் என்று சொல்லிக் கொள்கிருயே, எல்லோரையும்விட தத்துவ ஞானி என்று சொல்லிக் கொள்கிருயே, தாய் தந்தையர் மூதாதையர் எல்லோரையும்விட எனக்கு நாடுதான் பெரிது, அதைவிடப் பெரியது சட்டம். ஒவ்வொரு குடிமகனும் நேசிக்க வேண்டிய அருமையான ஒன்று உண்டென்ருல் அது சட்டத் தான் என்று அடிக்கடி சொல்வாயே, அப்படியெல் லாம் கூறையேறி கூறிய நீ யாருக்கும் தெரியாமல் ஒடப்பார்க்கின்ருயே என்ன நியாயம் என்று கேட் காதா கிரிடோ. தாய் தந்தையர்க்குத் தீங்கு செய்யாம லிருப்பதைப்போல நீ எங்களுக்கும் தீங்கு செய்யக் கூடாது. - - முதலாவது:-எங்களையும் மீறிச் சட்டத்தை மீறு வதால்தான் பெற்ருேரையும் மீறுகிருய் என்ருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/96&oldid=1331479" இலிருந்து மீள்விக்கப்பட்டது