பக்கம்:விஷக்கோப்பை.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு

93


சி. பி. சிற்றரசு 93. கடத்திவிடுங்கள் என்று சொல் வி யிருக்கலாம். இப்போது உன்னைப் போகவிடாதபடி தடுக்கும் அரசாங்கம் அப்போது உன்னைப் போகவிட்டிருக்குமே. ஆல்ை, நீயோ நாடு கடத்தப்பட்டு வாழ்வதைவிட சாவதே மேல் சாகத்தயார்' என்று பாசாங்கு செய் தாய். இந்த அருமையான பண்புகளை எல்லாம் இப்போது நீ மறந்துவிட்டாய். இப்போது எங்களை அழிக்கப் பார்க்கிருய். இந்நகரின் குடிமகனாக இருந்து அப்படியெல்லாம் ஆணே இட்ட நீ இப்போது கேவலமான ஒரு அடிமை நிலைக்குப் போகிருய். இதற்கு எப்படி பதில் சொல்வது கிரிடோ ? உண்மை என்றுதானே ஒப்புக்கொள்ள வேண்டும்? கிரிடோ : வேறு வழியில்லை. ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். சாக் : அப்போது சட்டம் சாக்ரடிஸ் நீ நிம்மதி யாக இருந்தபோது எந்தவிதமான அவசரமோ அபாயமோ இல்லாமல் வாழ்ந்தபோது ஏமாற்றுவ தற்கோ, ஏமாறுவதற்கோ இடம் இல்லாத போது இந்த விதிகளின்படியும், ஒப்பந்தங்களின்படியும் நடப்பதாக ஆணையிட்டாயே, இப்போது அவற்றை மீறுகிருயே! எழுபது ஆண்டுகள் இதைப்பற்றி யெல்லாம் சிந்திக்க நேரம் இருந்தும் சட்டத்தை மீறத் துணிகிருயே! உனக்குப் பிடிக்கவில்லையென்ருல் நேர்மையற்றவை என்று உனக்குத் தோன்றில்ை தாராளமாக இந்த நகரத்தைவிட்டு நீ போயிருக்க லாமே. இப்படி செய்யாதே சாக்ரடீஸ், ஊரைவிட் டோடிப் பல பேருடைய கேலிக்கு ஆளாகாதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/98&oldid=1331481" இலிருந்து மீள்விக்கப்பட்டது