பக்கம்:வீடும் விளக்கும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 103 அடித்தும் வளர்க்கலாம்: ஆனால் சில பிள்ளைகள் அளவுக்கு மீறிக் குறும்பு செய்வார்கள். அவர்களைப் பெற்றோரும் கண்டிப்பதில்லை. அக்குறும்பைக் கண்டு மகிழும் பெற்றோரும் உண்டு. அது பிறர்க்குப் பிடிக்காது. அக்குறும்புப் பிள்ளையினையும், கண்டிக்காத பெற்றோரினையும் நன்கு வதைக்க வேண்டும் என்றும் பிறர் எண்ணுவதுண்டு. அவ்வளவு வெறுக்கத் தக்க நிலையில் பெற்றோர் செல்லம் கொடுத்தலாகாது. கொடுத்தால் பிள்ளைகள் அறவே கெட்டுப் போவார்கள். பின்னால் பெற்றோர்க்கே அடங்காது போனாலும் போகலாம். ஆதலின், தாய்மார்கள் தம் பிள்ளைகளைத் திருத்துவதற்காகத் தம் பேரன்பை உள்ளேயே வைத்துக்கொண்டு அடித்தும் வளர்க்கலாம். அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் உருப்படா' என்றது பொய்யா? 'அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவார்கள்' என்றது. புனைந்துரையா? அல்லவே, ஆதலின் தாய்மார்கள், எவ்வெவ் விதத்தால் தம்பிள்ளைகள் முன்னேற்றம் அடைவார் களோ அவ்வவ்விதத்தில் அவர்களைப் பழக்கி வளர்க்கவேண்டும். அப்போது தான் பிள்ளைகள் பிள்ளைகளாகி விளக்கம் பெறுவார்கள். அதனால் தாய்மார்களாகிய தாமும் விளக்க மெய்தலாம். தம்மால் வீடும் விளக்கமுறும். எனவே, இவ்வளர்ப்பு முறைகளைத் தாய்மார்கள் நன்கு கடைப்பிடிப் பார்களாக.