பக்கம்:வீடும் விளக்கும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. விடும் விளக்கும் பிள்ளைகள் கடமை: ஆனால், தாய்மார்கள் மட்டும் தம் கடமைகளைச் செய்துவிட்டால் போதுமா? பிள்ளைகளும் பெற்றோர்க்குச் செய்யவேண்டிய கடமைகளை நன் குணரவேண்டும். ஆண்டிச்சி பெற்றது ஐந்தும் அவலம்' என்றபடி கணக்குக்குப் பிள்ளையென்றிருந் தால் மட்டும் போதுமா? தாங்கள் நற்குணசாலிகளாக விளங்கித் தம் பெற்றோரையும் விளக்கமுறச் செய்ய வேண்டும். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்', "தந்தை தாய்ப்பேண்', 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை', "தந்தைசொல் மிக்க மந்திரம் இல்லை' என்னும் பொன்மொழிகளைப் பொன்னேபோல் போற்ற வேண்டும். தாயிடம் பற்று: பெற்றதாய்தனை எக்காரணத்தை முன்னிட்டும் எப்போதும் மறத்தலாகாது. அவள் பசித்திருக்கவும் காணக் கூடாது. 'பெற்றதாய்தனை மகன் மறந்தாலும்...... நமச்சி வாயத்தை நான் மறவேனே' - திருவருட் பா. என்னும் தெய்வப்பாவையும் 'ஈன்றாள் பசிகாண்பா னாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’’