பக்கம்:வீடும் விளக்கும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 105 என்னும் குறளையும் ஊன்றி நோக்கின் உண்மை விளங்கும். எவனும் பெற்ற தாயை மறக்கமாட்டான்; மறக்கவும் கூடாது என்னும் கருத்து அப்பாவில் குறிப் பாக அமைந்து கிடக்கின்றது. அதேபோல், எவனும் ஈன்றாள் (பெற்ற தாய்) பசித்திருக்கக் காணமாட்டான்; காணவும் கூடாது என்னும் கருத்துக் குறளில் குறிப் பாகக் குறிக்கப் பட்டுளது. இன்னும், தாயைப் பழித் தாலும் தண்ணிரைப் பழிக்கக்கூடாது' என்னும் பழ மொழியும் தாயைப் பழிக்கலாகாது என்னும் கருத் தையே குறிப்பாக உணர்த்தி நிற்கின்றதல்லவா? இது பற்றி வழங்கும் சிறுகதையொன்றும் உண்டு. கடமை உணர்த்தும் கதை: ஒருரில் எரிமலை பற்றி எரியத் தொடங்கியது. மக்கள் அனைவரும் இன்றியமையாப் பொருள்கள் சில வற்றை எடுத்துக் கொண்டனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடவும் தொடங்கினர். ஆனால் ஒருவன் மட்டும் ஓடினானில்லை. எப்பொருளையும் எடுத்துக் கொண்டானும் இல்லை. வயது முதிர்ந்த கண்ணில் லாத தன் தாய் தந்தையர்களைத் தூக்கி இரண்டு தோள்களிலும் சுமந்து கொண்டு செல்லலானான். பலரும் இக்காட்சியைக் கண்டார்கள். ஆகா! இவ னல்லவா கடமையை உணர்ந்தவன்? இவனைப் பிள்ளையாகப் பெறுதற்கு இக்கிழவனும் கிழவியும் என்ன நோன்பு செய்தார்களோ? எனப் புகழ்ந்தார்கள். இதுபோலவே பிள்ளைகள் ஒவ்வொருவரும், இவன் தாய் தந்தையர் இவனைப் பெற என்ன நோன்பு