பக்கம்:வீடும் விளக்கும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வீடும் விளக்கும் தொண்டராகி விடுகின்றனர். அவள் பேச்சைக் கேட்டுத் தாயை வைவதும் வெறுப்பதும் செய்கின்ற னர். அதற்கேற்பவே சில பெண்களும் கடக்கின்றனர், கணவனைக் கையில் அடக்கிக்கொண்டு வயது முதிர்ந்த மாமியை வருத்துகின்றனர். உணவு முதலிய உதவிகளை ஒழுங்காகச் செய்வதில்லை. கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்துத் தள்ளாத கிழவியைப் படாத பாடு படுத்திவிடுகின்றனர். பொதுவாகப் பெண்கள், தம் மகன் சிறுவனாய் இருக்கும்போது அவனுக்கு உணவளிப்பதற்காக எப்பொழுது பள்ளிக்கூடத்திலிருந்து வருவான் எனத் தெருவையே நோக்கி அவன் வருகையை எதிர் பார்ப்பார்கள். அதேபோல் சில பெண்கள் மருமகள் வந்த பின்னரும், தமக்கு எப்போது சோறு கிடைக்குமோ என்றேங்கித் தெருவை நோக்கி மகன் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதும் உலகில் உண்டு. பிள்ளைகள் தாய்மார்களை இவ்வளவு எளிய நிலையில் வைத்திருத்தலாகாது. இறந்த பின்பு பிணத்தைச் சிறப்பாக எடுப்பதில் என்ன பயன்? சில குடும்பங்களில் தாய் தண்ணீரும் இன்றித் தவித்துக் கொண்டிருப்பாள். பிள்ளையோ அவளைச் சிறிதும் பொருட்படுத்தான். வருவார் போவார்க்கு விருந்து செய்தல் முதலிய ஆரவார வாழ்க்கையிலேயே ஈடுபட் டிருப்பான். 'தாய் தண்ணீரின்றித் தவிக்கின்றாள், தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்' என்னும் பழமொழி ஏற்பட்டதும் இன்னோரைக் குறித்தே. -