பக்கம்:வீடும் விளக்கும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 115 லும் இறுதிக்கடன் (சாவுச் சடங்கு) செய்வதற்காயினும் பிள்ளையிருக்கவேண்டும். இவ்வாய்ப்பும் இல்லாதார்க்கு ஒரு புகழும் இல்லை. இப்பழிச் சொல்லினின்றும் சிறிதாயினும் தப்புவதற்காகவே, சிலர் தமக்குப் பிள்ளையில்லா விட்டாலும் பிறர் பிள்ளையினையாவது எடுத்து (சுவிகாரம்) வளர்ப்பது வழக்கம். தமக்கென ஒரு பிள்ளை இருந்தால்தானே தாம் இறந்த காலத்தில் எல்லாக் கடமைகளையும் பொறுப்புடன் செய்து முடிப்பான். அதுதான் அனைவர்க்கும் ஒப்புதலாகவும் இருக்கும். சில பிணங்கட்குக் கொள்ளி வைக்க ஆளே கிடைப்பதில்லை. யாரை அழைப்பினும் நான் மாட்டேன்' என அஞ்சிப் பின்வாங்குவார்கள். இதனை ஆராய்ந்தால், எவ்விதத்திலும் பிள்ளையுள்ளவர்களே விளக்கம் பெற முடியும் என்பது விளங்குகின்ற தல்லவா? இங்கு நம் பட்டினத்தார் வரலாற்றை எடுத்துக் காட்டாமல் விட முடியவில்லை. பட்டினத்தார் பற்று: பட்டினத்தார்க்கு முதலில் வழங்கிய பெயர் திரு வெண்காடர் நம் திருவெண்காடர் மிகப் பெருஞ் செல்வர். மாணிக்க வாணிகம் (நவரத்தின வியாபாரம்) செய்தவர். பல கப்பல்கட் குச் சொந்தக்காரர். சுருங்கக் கூறின், தென்னாட்டுக் குபேரன் என்றே கூறிவிடலாம். அத்திருவெண்காடர் இறைவன் செயலால் இவ்வுலக இன்பத்தை வெறுத்தார். துறவுபூண்டார். துறவென் றால் எளியதன்று. கோவணத்தையும் பொறை (சுமை) யாகக் கருதிய கடுந்துறவு. வீட்டை விட்டு வெளி