பக்கம்:வீடும் விளக்கும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடும் விளக்கும் முடிப்புரை இந்நூலில் இதுவரையும் கூறப்பட்டவற்றைச் சற்றுச் சுருங்கத் தொகுத்து ஆராய்வோம். முதல் பகுதி மனித வாழ்க்கைக்கு விடும் விளக்கும் இன்றியமை யாத பொருள்கள் என்பதும், வீட்டிற்கு வெளிச்சம் ஒன்றனையே கொடுக்கும் எண்ணெய் விளக்கு, மின்சார விளக்குக்களைக் காட்டிலும், இடத்துய்மை, மங்கள முடைமை, தெய்வ விளக்கம், செல்வ விளக்கம் விருந்தோம்பல், கணவனைக் காத்தல் முதலிய பல விளக்கங்களையும் தரும் பெண்களே வீட்டிற்குச் சிறந்த விளக்கு ஆவார்கள் என்பதும், இன்ன பிறவும் முதல் பகுதியில் உணர்த்தப்பட்டன. இரண்டாம் பகுதி அடுத்தபடியாக, வீட்டின் விளக்காகிய பெண்கட் கும் விளக்கொன்று இருந்தால்தான் அவர்களும் விளக்கம் பெற்று வீட்டையும் விளக்கமுடியும் என்பதும், இயற்கை யமைப்பாலும், பெற்று வளர்க்கும் சிறப்புரிமையாலும், திருமணமாகிக் கருவுற்றதிலிருந்து