பக்கம்:வீடும் விளக்கும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வீடும் விளக்கும் பெற்றும், விருந்தினர் முதலானோரைக் காப்பாற்றி யும் வீட்டிலிருந்து கொண்டே செய்யும் இல்லற வாழ்க்கை மிகவும் சிறந்ததாகும் என்னும் உண்மை புலப்படும். ஆற்றல் (சகிப்புத் தன்மை) இல்லாத பேடிகட்கே குடும்பம் ஒரு சுமையாகத் தோன்றும். வீட்டில் மனைவி மக்கள், வேலையாட்கள் முதலானோ ருடனும், உணவு உடை முதலிய இன்பப் (போகப்) பொருள்களுடனும் கூடி இன்பவாழ்வு வாழ்ந்து வரும் சிலர், அவ்வின்ப வாழ்வுக்கிடையே ஒரு சிறு துன்பம் வந்து நேரிடினும் அதனைப் பொறுக்கும் வீரம் இல்லாக் கோழைகளாகிக் களைத்து விடுகின்றனர். தளர்ந்து சோர்ந்து புலம்பவும் தொடங்கிவிடுகின்றனர். திண்ணை வேதாந்தம்: மேலும் இவர்கள் வெறுந்திண்ணைப் பேச்சுக்கள் பல பேசத் தொடங்கிவிடுகின்றார்கள். குடும்பமே ஒரு சுமை (பாரம்); இவ்வுடலே (காயமே) பொய் யானது; உலகமே நிலையற்றது (மாயை); ஆதலின் இத்துன்ப உலகில் குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டு பல துன்பங்களை அடைந்து வருந்துவதைக் காட்டிலும், துறவி (சங்கியாசி) யாகி வீட்டை விட்டு வெளியேறிவிடுவது மிகவும் நல்லதாகும்' என வாய்க்கு வந்தபடியெல்லாம் பிதற்றுகின்றனர். இப்பேடிகளின் பேதைமையை என்னென்று பேசி நோவது? வீட்டில் இருந்துகொண்டு வெயிலாலும், மழையாலும், பனியாலும், பசியாலும், இன்னபிற