பக்கம்:வீடும் விளக்கும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 125 துன்பங்களாலும் சிறிதும் தாக்கப்படாமல் இன்ப வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கும்போதே இவர்கள் களைத்து இளைத்துப் போகின்றார்களே! இவர்களாலே துறவி யாகப் போய் மேற்கூறிய துன்பங்கள் பலவற்றையும் எதிர்த்து வெற்றி பெற முடியுமா? துறவியென்றால் எவ்வளவோ பொறுக்குங்தன்மை இருக்க வேண்டாவா? எனவே, இப்பேடிகள் தப்பித் தவறி வீட்டை விட்டு வெளியேறிவிடுவார்களேயாயின், முன்னிலும் பன் மடங்கு இடர்ப்படுவார்கள் என்பது திண்ணம். பல்லக்குச் சுமப்பது யார்? ஆகவே, இத்தகைய வெறுந்திண்ணைப் பேச்சுக்களை அறவே அகற்றிவிட வேண்டும். அங்ங்ணமே அனைவரும் துறவியாகப் போய்விடின் உலகந்தான் நடப்பதெப்படி? தொழில் செய்ய முடியாத நோயாளிகள், கூனர், குறளர் முதலானோர் பிழைப்பது தான் எப்படி? துறவிகளே சில சமயங்களில் நோய், பசி முதலியவற்றால் தாக்கப்பட்டு வருந்தும்போது அவர்களைக் காப்பவர்தாம் யாவரோ? அனைவரும் பல்லக்கு ஏறிவிட்டால் சுமக்கத்தான் ஆள் வேண்டாவ ா? இந்நோக்கத்தாலேயே, துறந்தாாக்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை' என வள்ளுவரும் வகுத்துச் சென்றுளார். ஆதலின் கோழைமையை நீக்கிக் குடும்ப வீரராகத் திகழ்வதே மேல்.