பக்கம்:வீடும் விளக்கும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் சுந்தர சண்முகனார் சிறந்த இலக்கிய வல்லுநராகத் திகழ்ந்த சுந்தர சண்முகனார் அவர்கள் தமிழுக்கு மிகப்பெரிய தொண்டு செய்துள்ளார். சிறந்த கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்றதோடு தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் தொகுப்பியல் துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். செந்தமிழ் ஆற்றுப்படை என்னும் நூலைப் படைத்தமைக்காக நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களே அவருக்கு "இயற்கவி’ எனும் பட்டத்தை வழங்கியுள்ளார். இன்று தமிழகம் இருக்கின்ற சூழ்நிலையில் ஏராளமான பேர்களைச் செந்தமிழ் நோக்கித்தான் ஆற்றுப்படுத்த வேண்டியுள்ளது. கல்வித் துறையிலுங்கூட. அகராதிக் கலையில் அவருக்குப் பெரும் ஈடுபாடு இருந்துள்ளது. இலக்கண அறிவும், இலக்கிய ஆர்வமும் படைத்த சுந்தர சண்முகனாரின் தொண்டுகளை நினைவில் கொண்டு பாராட்டுவோம். இக்காலத்தில இவரைப் போன்ற பேராற்றல் படைத்த அறிஞர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையிலும் சுந்தர சண்முகனார் போன்றவர்களின் பணிகளால் விளைந்த தமிழ் மேம் பாட்டினைச் சிந்தித்துப் பார்த்துச் செயற்பட வேண்டியது நமது கடமையாகும். முனைவர் மு. தமிழ்க்குடிமகன் எம்.ஏ.,பி.எச்.டி., தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை - 600 009.