பக்கம்:வீடும் விளக்கும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 41 'அன்பரே! இன்று கொல்லையில் விதைத்த நெல், மழை நீரில் மிதந்து கொண்டிருக்குமே வாரிக்கொண்டு வரலாமே என நினைவூட்டினார்கள். அங்ங்ணமே நெல்லும் கொணரப்பட்டது. அம்மையாரும் நெருப்பின் உதவியால் நெல்லின் ஈரத்தைப்போக்கிக் குற்றி அரிசியாக்கினார்கள். கூரையில் இருந்த அலகுகள் இழுக்கப்பட்டு விறகாயின. தோட்டத்துக் கீரைகள் கொணரப்பெற்றுப் பயனளித்தன. கீரை வகைகளைக் கொண்டே தம் திறமையால் பலவகைக் கறிகள் சமைத்தார்கள். அடியாரையும் அமுதுண்ண அன்புடன் அழைக்கலானார்கள். ஈண்டு அம்மையாருக்குப் போதிய திறமையில்லாவிடின் இவ்வளவு புகழ்ச்சிக்கு இடமுண்டோ? அவ்வம்மையார் ஆற்றிய செல்வ விளக்கந்தான் என்னே! சில பழக்கவழக்கங்கள்: இன்னும் தமிழருடைய சில பழக்க வழக்கங்களும் இக்கருத்தை நன்கு வலியுறுத்துகின்றன. அவற்றைச் சிறிது நோக்குவோம். பெண்கள் வெள்ளிக்கிழமையில் வீட்டைவிட்டு வேறு வீட்டிற்கோ வெளியூருக்கோ செல்லலாகாது. சென்றாலும் அங்கேயே தங்கிவிடாது அன்றே திரும்ப வீடு வந்து சேர்ந்துவிடவேண்டும். அங்ங்ணம் வேறு வீட்டிற்குச் சென்றால் திருமகளும் தம்முடனேயே வந்து விடுவாளாம். இதற்கேற்றபடியே பெண்கள் எப்பொருளையும் வெள்ளிக்கிழமையில் வெளியாருக்குக் கொடுக்கமாட்டார்கள். எனவே திருமகளைத் தம்முடனேயே வைத்துக்கொண்டிருப்