பக்கம்:வீடும் விளக்கும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 9 | கூர்ந்து நோக்கின், தாய்மையின் நிலைக்களமான பெண்கட்கு ஆண்கள் மிகுதியும் கடமைப்பாடுடைய வர்கள் என்பது சொல்லாமலே விளங்கும். மற்றும், அன்றாட வாழ்க்கையிலும் தம் நன்மை முழுவதையும் பிள்ளைகட்காக விட்டுக்கொடுக்கின் றார்கள். தாம் உண்ண வைத்திருக்கும் உணவைப் பிள்ளைகள் விரும்பிக்கேட்டால் கொடுத்துவிட்டுத் தாம் பட்டினி கிடக்கின்றார்கள். தமக்கு எவ்வுணவில் விருப்பமோ, அவ்வுணவை இப்போது குழந்தையின் நலத்திற்காக நீக்கிவிடுகின்றார்கள். தாம் எவ்வுணவை முன்பெல்லாம் வெறுப்பது வழக்கமோ, அவ்வுணவை இப்போது விரும்பி (பத்தியம்) உண்கின்றார்கள். தாம் சிறுமிகளாய் இருந்தபோது ஒரு தின்பண்டத்திற்காகத் தம் பெற்றோரிடத்திலும் உடன் பிறந்தாரிடத்திலும் எவ்வளவோ வம்பு செய்திருப்பார்கள். இப்போது அத்தின்பண்டம் கிடைக்கின், அப்படியே வைத்திருந்து பிள்ளைகள் வந்ததும் கொடுக்கின்றார்கள். இங்ங்னம் உணவளிப்பதில் பெயர்பெற்றவர்கள் தாய்மார்களே. 'தாய்க்கடுத்தது தாரம்' என்னும் தொடர் ஒன் றுண்டு. இத்தொடருக்கு, தாய்க்குப் பின்னால் உணவு முதலிய நன்மை செய்வதில் சிறந்தவள் மனைவி என்பது பொருள். இன்னும் இதற்கு, தாரமும் (மனைவியும்) தாய்க்கு அடுத்தபடி தான். அதாவது இரண்டாம் படித்தரங்தான் என மற்றொரு பொருளும் கூறிவிடலாம். ஆனால் எங்கேயோ சில பெண்டிர் பிள்ளைகளிடம் போதிய அன்பில்லாதவராய் இருக்க