பக்கம்:வீடும் விளக்கும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர சண்முகனார் 97 உடைகளை வாங்கிக்கொண்டு நும் உடைகளைத் தருவீராக; யான் போருக்குச் சென்று வெற்றி பெற்று விரைந்துவந்து நும்மை மகிழ்விப்பேன்' என்று கூறினாள். கேட்டான் கணவன். தலை குனிந்தான். உடனே கிமிர்ந்து நின்றான். வாளேந்தி னான். போர்க்களத்திற்குப் பறந்தோடினான். வீரப் பெண்ணும் கண்டு களித்தாள். இதல்லவா வீரம்? இப்போதும் சில குடும்பங்களில், ஆண்கள் கோழை களாய் ஒரு தொழிலைச் செய்ய அஞ்சுவதுண்டு, உடனே பெண்கள் உறுதி (தைரியம்) புகட்டியும், அத் தொழிலைச் செய்யும்படியாக வற்புறுத்தியும் பிடர் பிடித்துத் தள்ளுவதை நாம் காணலாம். இதைப் போலவே பிள்ளைகளையும் பழக்கவேண்டும். கடமைகள்: பொன்மொழியார் என்னும் பெண் புலவர் புற நானுற்றில் ஒவ்வொருவருடைய கடமைகளையும் குறிப்பிட்டுள்ளார். 'பிள்ளையைப் பெற்று வளர்த்தல் பெண்ணாகிய என் கடமையாகும். அப்பிள்ளையைக் கல்வியறிவால் சிறந்தவனாக்குதல் தந்தையின் கடமை யாகும். அவன் போர் செய்தற்கு வேல் முதலிய படை களைச் செய்து தருதல் கொல்லன் கடமையாகும். அவனுக்கு நன்னடை நல்கல் அரசன் கடமையாகும். போர்க்களத்தில் முன்னணியில் கின்று எதிரியின் யானைகளை வாளால் வெட்டியெறிந்து வெற்றி பெறுதல் காளையாகிய என் மகனுக்குக் கடமையாகும்' என்னும் கருத்தில்,