பக்கம்:வீடும் விளக்கும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விடும் விளக்கும் 'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தங்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' என அழகாகப் பாடப்பட்டுள்ளது அப்பாடல். இப் பாடலை ஒரு பெண் புலவரே பாடியிருப்பது நுணுகி நோக்கி மகிழ்தற் குரியதாகும். மேலும் என் தலைக் கடனே (தலைக் கடன் - முதல் கடமை) என்பதை ஆராய்ந்து பார்க்கின், பெண்கள் பெற்று வளர்த்தால் தான், பின்னால் கூறப்பட்ட நிகழ்ச்சிகள் நிகழ்த்தப் பெற்று ஒரு நாடே வெற்றியால் விளக்கம் பெறும் என்பது பெறப்படுகின்றது. மற்றும் அப்புற நானூற்றிலேயே. ஒரு வீரத்தாய் தன் சிறு மகனைப் போருக்கனுப்பியதாக இரண்டு செய்யுட்கள் உள்ளன. அவற்றின் கதையமைப்பு வருமாறு: வீரத்தாய்: - வீரப் பெண்ணொருத்தி கணவனுடன் இல் வாழ்க்கை நடத்தி வந்தாள். நீண்ட நாளாகப் பிள்ளை யில்லை. முதுமையும் நெருங்கத் தொடங்கிற்று. அரிய நோன்பு கிடந்தாள். பின் வயதான காலத்தில் ஓர் ஆண் மகன் பிறந்தான். சீராட்டிப் பாராட்டி வளர்த் தாள். அவளுக்கு ஓர் அண்ணனும் உண்டு. இவ்வளவே அவள் குடும்ப நிலை. இப்படி வாழ்ந்த காலையில் அவ்வூரை வேற்றரசன முற்றுகையிட்டான். உள்ளுர்