பக்கம்:வீடும் வெளியும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 39 களாக விளங்கின. அவரே தனக்கு அருமையான முன் மாதிரி' என்று அவன் அடிக்கடி கருதுவான். காந்தி, கவலையில்லாமல் வளர்ந்தவன். கடுமை யான வேலைகள் செய்து பழக்கப்படாதவன். மாணவப் பருவத்திலேதான். அவன் அப்பாவுக்கு நல்லபிள்ளையாக நடந்து கொண்டிருந்தான் என்ருல், இப்போதுகூட அவனுடைய வாழ்க்கை சிக்கல் சிரமம் எதுவுமற்று, மேடு பள்ளங்கள் இல்லாது, அருமையாகவும் இனிமையாகவும் இயங்கிக்கொண்டுதான் இருக்கும் முந்தைய மனுே நிலையில் அவன் வாழ்ந்து வந்திருந்தால் அந்தவித வாழ்க்கை அவனுக்குப் பிடித்தும் இருக்கும். ஆனல், திடீரென்று விடுதலைப் போராட்டத்தில், குதித்து, தனது வாழ்வில் தானகவே ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக்கொண்ட பிறகு-அதன் விளைவுகள் அவ னுடைய உள்ளத்தையும் உணர்ச்சிகளையும் வெகுவாகப் பாதித்த பின்னர்-அவனுக்குச் சிந்தனை விழிப்பும் அறி வுத் தெளிவும் ஏற்பட்டன. அவன் தன்னைச் சுற்றி உள்ளவர்களையும், ஊர் மக்களையும் கவனித்தான். சமூ . கம், நாடு முதலிய பெரிய விஷயங்களைப்பற்றிச் சிந்தித்து, எவ்வளவோ உண்மைகளைப் புரிந்து கொண்டான். எண்ணங்களில் வாழ்வதும், சிந்தனையில் மூழ்கிக் கிடப்பதும் அறிவுக்கு லாபம் பெற்றுத் தரக்கூடும். ஆனல் அன்ருடத் தேவைகளுக்கு அவற்றினல் எவ்வித மான பயனும் கிட்டாது. காந்திக்கும் இவ் வுண்மை உறைத்தது. அவன் தன் தேவைகளைச் சுருக்கிக் கொண் டான். உல்லாசப் பொழுது போக்குகள், கேளிக்கைகளே அவன் மனம் நாடவில்லை, தோற்றத்திலும் உடைகளி லும் அவன் எளிமையைத்தான் மேற்கொண்டிருந் தான். எனினும், உணவுக்கும் அத்தியாவசியத் தேவை களுக்கும் ஈடுகட்ட குறைந்தபட்ச வருமானமாவது வந்து கொண்டிருக்க வேண்டும் அல்லவா? கதர்த் துணி விற்பது, பத்திரிகைகளுக்கு ஏஜன்சி எடுத்து விற்பனை செய்வது, சுதேசிச் சாமான்களை வர வழைத்து சிறு வியாபாரம் செய்வது போன்ற சிறு அலு