பக்கம்:வீடும் வெளியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1so வீடும் வெளியும் வல்கள் மூலம் அவனுக்கு ஏதோ கொஞ்சம் கிடைத்து வந்தது. சில பையன்களுக்கு ட்யூஷன்' கற்றுக்கொடுப் பதன் மூலமும் அவன் சிறு வருவாய்க்கு ஏற்பாடு செய்து கொண்டான். டைப் அடிக்கும் இயந்திரம் ஒன்று வாங்க வேண்டும். அதன் மூலம் பிழைப்புக்கு வழி ஏற். படும்’ என்று அவன் ஆசை வளர்த்து வந்தான். ஆணுல், அதை வாங்குவதற்குத் தேவையான பணத்துக்கு எங்கே போவது ? அது பெரும் பிரச்னை, அவனைப் பொறுத்த, மட்டில். - இப்படி, தனி மனிதர் ஒவ்வொருவருக்கும் சுமை யான பிரச்னைகள் இருந்து வந்தன. வாழ்க்கை வெயிலி ஞல் அவர்கள் கருக்கப்பட்ட போதிலும், அவர்கள் உள். ளத்தில் கனன்று கொண்டிருந்த தேச பக்தக் கனலையும் அதல்ை மூட்டப்பெற்ற விடுதலை ஆர்வத் தீயையும், தங். களேயே தகிக்கும் பெரு நெருப்பாக அவர்கள் ஒருபோது கூட எண்ணவில்லை. இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறை பட்டா லும், பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற்ரு லும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தென்னை அழித். திட்டாலும், சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறந்திலேனே!” என்ற கவிக்குரல் உண்மை தேசபக்தன் ஒவ்வொருவனின் இதய ஒலியே ஆகும். தேச பக்தியையும் சுதந்திர ஆர்வத்தையும் வெறும் பாஷன் பண்புகளாகவும், புகழுக்கு வழி செய்த தரும் மந்திரங்களாகவும் மதித்தவர்கள் மெதுவாகத் தலை, துர்க்கவிாஞர்கள். பிழைப்புக்கு வழி செய்யும் தந்திர உபாயமாகவும் இவற்றை வரித்துக் கொண்டவர்களும் சிறிது சிறிதாகத் தங்கள் சுய உருவைக் காட்டத் தொடங்கினர்கள். ஆரம்ப காலத்தில் ஒரு வேகத் தோடும் உற்சாகத்தோடும் தேசியப் பணியில் மும்முர மாக முனைந்தவர்கள், சொந்தப் பிரச்னைகளினலும் தேவைகளாலும் அலைக்கழிக்கப் பெற்று, சந்தர்ப்பவாதி. களாக மாறி நின்ருர்கள். காலம் மனிதர்களின் போக்கிலே நிகழ்த்தி வந்த சித்து விளையாட்டுக்களை காந்திமதிநாதன் கவனிக்கத்.