பக்கம்:வீடும் வெளியும்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 வீடும் வெளியும் உயிருமற்ற பயங்கரமான இயந்திரம் அசுர வேகத்திலே ஆக்கியும் அழித்தும், சிதைத்தும், உருக் குலைத்தும், இயன் பிறப்பித்தும்,ஏதோ ஒரு நியதியின்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்றும் கூறுவர். w காலத்தை. கன்னி என்றும் தேவன் எனவும் உருவகப் படுத்தி மகிழ்ந்து போவோரும் உண்டு. உருவகங்களின் பொருத்தம் எப்படியும் போகட்டும். நாம் புரிந்து கொள்ளக் கூடிய உண்மை, காலம் மகத் தான வலிமை உடைய மாபெரும் சக்தி; அது ஆதி அந்தம் அற்றது; அது எல்லோருடைய வாழ்விலும் கண் மூடித்தனமாகத் தன் சக்தியை நிலைநாட்டி வருகிறது. அத் மட்டுமன்று. சிறிய காரியம் ஆயினும், பென்னம் பெரிய ச்ோதன்கள் ஆயினும் சரியே. மனித முயற்சி களும், ஆற்றலும் உழைப்பு: திட்டங்களும் வெற்றி றுெவதும், பெருமல் சீர்கெட்டுப் போவதும் காலத்தின் சக்தியைப் பொறுத்தே அமைகின்றன. காலத்தின் சக்தி தனிமனித வாழ்விலும், சமூகத் தின் நலத்திலும், நாடுகளின் வளர்ச்சி தேய்வுகளிலும், உலகத்தின் வரலாற்றிலும், உயிர்க் குலத்தின் இயக் தங்களிலும் சதா தனது பாதிப்புகளைப் பதித்தவாறே. ஒடுகிறது. இந்தச் சக்திழின் இயக்கத்தினுல் சாம்ராஜ் பங்கள் சரிகின்றன: புதிய அரசுகள் மலர்கின்றன. செல்வர்கள் தரித்திரர்கள் ஆகிருர்கள்; பொறுக்கிகளாய் திரிந்தவர்கள் பெரும் புகழுக்கும் பெருநிதிக்கும் அதிபர் கள் ஆகிவிடுகிரு.ர்கள். மாண்புக்கும் பதிப்புக்கும் உரிய தாகித் திகழ்ந்தி சமூகங்கள் பழிப்புக்கும் பரிகாசத்துக்கும். இலக்காகின்றன. தாழ்வுற்றுச் சீர ழி ந் து கிடந்த சமூகங்கள் செல்வச் சிறப்பும் அந்தஸ்து உயர்வும் பெறு வதும் சாத்தியமாகிறது. கால சக்தியின் தூண்டுதல் காரணமாக, நடக்க முடி யாது என எண்ணப்படுகிற செயல்கள் பல வெகு சுலப மாக நிகழ்ந்து விடுகின்றன. நடவாது, நடக்கக்கூடாது என்று கருதப்படுகிற நடவடிக்கைகள் தவிர்க்க முடியாத வாறு வேகம் வேகமாக நடைபெற்று முடிகின்றன.