பக்கம்:வீடும் வெளியும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#65 வீடும் வெளியும் வேருெரு புறமிருந்து, ஜெய் ஹிந்த்' என்ற புதிய கோஷம் எழுந்தது. சுபாஷ் சந்திரபோஸ் நேதாஜி: என்ற புதிய க்ெள்ரவமும் கவனிப்பும் பெற்றுக் கொண் டிருந்தர்ர். அவருடைய இ. தே. ரா. (இந்திய தேசிய ராணுவம்) செயல் புரிய ஆரம்பித்திருந்தது. புத்தம் பயங்கரங்களை விதைத்தது. மக்களிடையே, நாடுகள் மத்தியில் பயத்தையும் மாறுதல்களையும் ஏற்படுத்தியது. இந்தியாவைக் கட்டிக் காப்பாற்றுவதைத் தங்கள் கடமையாக ஏற்றுக் கொண்டு நற்பணி புரிவதாகப் பெயர் பண்ணி லாபம் பெற்று வந்ந பிரிட்டிஷாரின் மனசிலும் மாற்றம் காணப்பட்டது. அரசியல் சலுகை கள் வழங்கிஞர்கள். காலம் மேலும் மேலும் தன் சக்தியைப் பலவழி களிலும் நிரூபித்தவாறு முன்னேறியது. எங்கும் எவ் வளவோ நிகழ்ச்சிகள், எத்தனை எத்தனையோ மாறுதல் கள்: , இந்தியா சுதந்தரம் பெறுவதற்கும் காலம் துணை Hதிேத்து. 21. பெரும் இழப்பு “எங்கும் சுதந்தரம் என்பதே பேச்சு எல்லோருக் கும் சமம் என்பது உறுதியாச்சு' என்று கவி பலப்பல வருடங்களுக்கு முன்னரே கூறிய நிலைமை நம் காலத்தில் ஏற்பட்டு விட்டது என்று நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள், விடுதலை விடுதலை, விடுதலை!’ என்று ஆனந்த்க் களிப்போடு கொண்டாடினர்கள். கண்ணிரும் செந்நீரும் சிந்தி, தடியடியும் சிறைவாசமும் கொடிய பல இன்னல்களும் அனுபவித்து சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்ற முறையில் தேசிய இயக்கத் தினரின் உற்சாகமும் உவகையும் அளவுக்கு அதிகமாகவே பொங்கிப் பெருகின. -