பக்கம்:வீடும் வெளியும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露蘇 வீடும் வெளியும் காந்தி எனும் பூசாரி சத்தியக் குழை அடிச்சார்! வெள்ளைப் பேய்களெல்லாம் வெருண்டு மிரளுது பார்!’ என்று நீட்டி முழக்கினன். "சரிதாம்போ. நீ சிங்கி தட்டிக்கிட்டே இருந்தால் தாளேயச் சாப்பாட்டுக்கு என்ன செய்வியோ, எனக்குத் தெரியாது' என்று புலம்பிளுள் தாய். சபருப்பு முள்ளங்கி சாம்பார் பல்லாரி ஜில்லாச் சிறையில் என்பார்! தல்லாயிருக்கு மென்று அள்ளி உண்டு விட்டால்.” என்று மகன் பாட ஆரம்பிக்கவும் அம்மாளுக்கு எரிச்சன் தான் ஏற்பட்டது.

  • நீ எக்கேடும் கெட்டுப் போ. நான் என் வேலையைக் கவனிக்கப் போகிறேன்' என்று சொல்லிவிட்டு வெளியே சென்ருள் அவள்.

சொக்கையா என்கிற சொக்கலிங்கம், ஏதோ பெரிய வேடிக்கையைக் கண்டுவிட்டவன் போல, வெடிச் சிரிப்பு சிதறிஞன். கண்ணுடி முன் நின்று தனது முக அழகை ரசித்துக் கொண்டான். பரட்டைத் தலே போல் தோற்ற களித்த தலை முடியைச் சீப்புக்கு அறிமுகம் செய்து வைத்தான். ஆயினும் அது அடங்காமல் சிலிர்த்துக் கொண்டுதான் நின்றது. தொள தொள வென்றிருந்த நீண்ட சட்டையை அணிந்து, நீலமும் அல்லாத பச்சை திறமும் இல்லாத ஆனல் இரண்டும் கலந்தது போன்ற ஒரு வர்ணம் காட்டும் பெரிய சால்வையை மேலே ஸ்டைலாகப் பரப்பிக் கொண்டான். தங்க விளிம்புக் கண்ணுடியை (இருண்ட நிறம் பெற்றிருந்த கூலிங் கிளாஸ்") அணிந்து, கண்ணுடியில் படிந்த தன் நிழலைப் பார்த்து, பெருமைப் புன்சிரிப்புக் காட்டி, தலையை ஆட்டினன். ஜால்ராவைத் தலைக்கு மேல் வைத்து அதை வெள்ளேக் குல்லாயினுல் மறைத்தான்.