பக்கம்:வீடும் வெளியும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 麗巒翻 களும் பலரால் பரப்பப்பெற்றன. பக்தியையும் மத நம் பிக்கைகளையும் போற்றி வளர்க்கும் தமிழகம் இந்த ரக பான எண்ணங்களுக்கும் வரவேற்பு அளித்தது . அவற் றினுள் வசீகரிக்கப்பட்டது. நாட்டு மக்களின் போக்கை திட்டவட்டமாகப் புரிந்து கொள்ள இயலவில்லையே என்ற குழப்பம் காந்திமதியை அமைதியற்றவஞகத் திரி யச் செய்தது. - மதம் உள்ளத்தைப் பண்படுத்தி, மனிதர்களை நல்ல வர்களாக வாழ வழிகாட்டி, அவர்களது ஆத்ம நலனுக்கு வகை செய்யும் என்று பொதுவாக நம்பப்பட்டாலும், கால வேகத்தில் அது அவ்வாறு செயல்படும் திறனை இழத்து விட்டதோ என்று சாந்தி எண்ணிஞன். அறி யாமையையும், குருட்டுப் பக்தியையும், வெறியையும் வளர்க்கும் சாதனமாக அது மாறிவிட்டதோடு, அரசியல் லாப நோக்குடன் சுயநலமிகளாலும் திறமை மிகுந்த தந் திரிகளாலும் வலுவான கருவியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு நிலைமையையும் மதம் அடைந்துள்ளது. உண்மையும் அவனுக்கு வேதனை தந்தது. வேதனைகளின் மேல் வேதனை சுமத்துவதாய், துயரங் களின் சுமையை மேலும் அதிகரிப்பதாய், ஆருத்துயர் களோடு ஆற்றமுடியாப் பெருந்துயராய் எதிர்பாரத விதத்தில் ஒரு நாள் நிகழ்த்தது யாருமே எதிர்பார்க்க முடியாத அந்த நிகழ்ச்சி. மாலே மயங்கிவரும் நேரம், காந்திமதிநாதன் சில நண்பர்களோடு எங்கோ போய்விட்டுத் திரும்பிக்கொண் டிருந்தான். அதனுல் அவன் ரேடியோ ஒலி பரப்பிய துக்கச் செய்தியைக் கேட்கவில்லை. திருநகரின் கடை வீதி கள் வழியே நடந்த அவனே அங்கு நிலவிய பரபரப்பும், சோகச் சூழ்நிலையும், அச்சம் கலந்த தன்மையும் திகைக்க வைத்தன. செய்தியைக் கேட்டவர்கள் முகம் களையிழந்து காணப்பட்டது. எல்லோரும் மாபெரும் இழப்புக்கு ஆளாகி விட்டவர்களாகவே தோன்றிஞர்கள். ஆமாம், மாபெரும் இழப்புதான்; மகாத்மா காந்திஜீ சுட்டுக் கொல்லப்பட்டார்.