பக்கம்:வீடும் வெளியும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 வீடும் வெளியும் இப்படி நாளுவகைகளிலும் மதிப்புக்கும் மரியாதைக் கும் உரிய பெரிய ஆளாக மாறியிருந்தார் திருவாளர் சுந்தரம். அவர் காந்தியை மதித்தார்; அவனிடம் தோரன எதுவும் காட்டவில்லை; அவன் சம்பந்தப்பட்ட மட்டில் அவர் பழைய சுந்தரமாகவே பழக முன் வந்தார் என்பதை அவன் புரிந்து கொண்டான். 1ளார், உங்களைப்பற்றி நான் அடிக்கடி கேள்விப் வடுகிறேன். பலரும் உங்கள் பணிகளைக் குறித்து பெருமை பாகவே பேசுகிரு.ர்கள்’’ என்று சுந்தரம் சொன்னர். அந்தப் புகழ்ச்சிக்கு அவன் பதில் எதுவும் கூற வில்லை. அவர் தொடர்ந்து பேசினர். "ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு எண்ணம். உங்கள் உதவி தேவை. இப்பதான் விசேஷமான தொண்டுகள், சேவைகள் என்று உங்கள் காலத்தையும் கவனத்தையும் எடுத்துக் கொள்வதற்கு எதுவும் இல்லையே? எனக்கு உங்களைப் போல் திறமைசாலியான ஒருவர் செக்ரடரி பாக வேண்டும். கடிதப் போக்குவரத்துகளைக் கவனிக்க, விரமுகர்களைச் சந்தித்து ஆங்கிலத்தில் உரையாடஇப்படி எவ்வளவோ இல்லை?, அவற்றை எல்லாம் பொறுப்பேற்று நடத்தணும். நீங்கள் இதை ஏற்றுக் கொண்டால் எனக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கும். ஆரம்பத்தில், மாதம் நூறு ரூபாய் தந்து விடுகிறேன். அலவன்சு மாதிரி ஐம்பது ரூபாய் தரலாம். பிறகு அதிகப் படுத்த முடியும்' என்று சுந்தரம் சொன்னர். கார் மெதுவாகப் போய்க் கொண்டிருந்தது. காந்தி மதிநாதனுக்கு இந்த ஏற்பாடு பிடித்துத் தானிருந்தது. இப்பொழுதே சரி என்று சொல்லி விடலாமா என்ற எண்ணம் தலைநீட்டித் துடித்தது. - என்னடா இவனிடம் வேலைக்குப் போவதா என்று நீங்கள் எண்ணக்கூடாது. நாம் நண்பர்களாகவே. பழகுவோம்...' என்று சுந்தரம் சொல்லத் தொடங்கவே, காந்தி அவசர அவசரமாகக் குறுக்கிட்டான். சேத்சே, நான் அப்படி எல்லாம் நினைக்கவில்லை." என்று இழுத்தான்.