பக்கம்:வீடும் வெளியும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 贾露贾 ஏற்பாடு செய்கிறேன்' என்ற சுந்தரம், உடனடியாக ஒரு ஆளைக் கூப்பிட்டு உத்தரவிட்டார். ச.அதெல்லாம் எதுக்கு? நான் கீழேயே படுத்துப் பழகிவிட்டேன். -

இல்லை இல்லை. சில வசதிகள் மனிதனுக்கு அவசியம் தேவைதான், அவை இல்லாமல் கழித்துவிட் முடியும் என்பது சரி. கிடைக்கிறபோது, கிடைக்க வகை ஏற்படுகிறபோது, அவற்றைப் பயன்படுத்த நாம் தயங்கக்கூடாது. நாம் எல்லா நகர வாழ்வை விரும்பி ஏற்றுக்கொள்கிருேம். அப்புறம் நாகரிக வசதிகளைப் புறக்கணிப்பானேன்?' என்ருர் சுந்தரம், அவன் தன் அனத் தவருக எண்ணிவிடக் கூடாதே என்று உடனே குறிப்பிட்டார். 'நான் உபதேசம் எதுவும் பண்ண வில்லை ஸ்ார். நட்பு முறையில் என் எண்ணத்தைச் சொன்னேன். அவ்வளவுதான்i'

கந்தரம் நல்ல மனிதன் என்ற அபிப்பிராயம் காந்தி மதிநாதனுக்கு ஏற்பட்டு விட்டது. அவர் அவனைக் காரில் அனுப்பினர்.பெட்டி படுக்கைகளே அதே காரில் எடுத்து வந்துவிடலாம் என்றும் சொன்னர். அவனும் அவ்வாறே செய்து முடித்தான். தனது வாழ்க்கையில் புதிய திருப்பத்துக்கு அடி கோலியாயிற்று என்ற திருப்தி அவனுக்கு ஏற்பட்டது 'இன்று நாள் புதிது. நாம் புதியர். இனி, புதுவாழ்வு வந்தெய்தும்’ என்று அவன் உள்ளம் களிவெறிகொண்டு பாடியது. 24. புதுக் கவர்ச்சி பொதுவாக வாழ்க்கை சாரமற்றதாகவே தோன்று கிறது. ஒரு நாளைப்போல் மறுநாள், இன்றுபோல் நாளே என்று நகர்கிறது உற்சாகத்துக்கு இடம் தராத வறண்ட இயந்திரப்போக்குதான் சாதாரண வாழ்வின் பொதுத்தன்மை ஆகிவிடுகிறது.