பக்கம்:வீடும் வெளியும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் #33 வந்த சாதாரண மிலிட்டரி ஆசாமி மட்டுமல்ல. இ. தே. ரா. வீரரும் கூட! - நேதாஜியை நீர் பார்த்தீரா? இ. தே. ரா. என்ன செய்தது? நேதாஜியின் திட்டம் என்ன?’ என்றெல்லாம் பலரும் பலப்பல கேட்டார்கள் அவரிடம். சொக்குப் புலவரும் அனுபவங்களை அளந்து கொட்டி ர்ை. அவற்றில் எத்தனை சத விகிதம் உண்மை, எவ்வ ளவு அவர் கைச் சரக்கு என்பதை எவரும் கணித்து விட இயலாது. அவருக்கு அவர்தான் ஆதாரம், சாட்சி எல்லாம். அந்த வட்டாரத்தில் அவருக்கு விசேஷமான கவ னிப்பும் மதிப்பும் கிடைத்தது அவர் எதிர்ப்படுகிறவர் களே முன்பு மாதிரி வணக்கம்' என்ருே, கைகுவித்தோ வரவேற்பதில்லை. விறைப்பாக நின்று, ராணுவ சல்யூட் அடித்து "ஜெய்ஹிந்த்' என்று கூறி வணங்குவார், அவ்வூர் வாசிகள் அவரையே "நேதாஜி” என்று குறிப் பிட்டார்கள். அவரும் நேதாஜி சொக்கப்பா என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கண்டார். சிறு கூட்டங்கள், வாசகசாலை, இரவுப்பள்ளி, நூல்நிலையம் போன்றவற் றின் திறப்பு விழாக்கள் முதலியவைகளில் அவர் விசேஷ பங்கு ஏற்க நேரிட்டது. ஊரை விட்டுப் போவதற்கு முன்பு அவருக்கிருந்த ஏக்கம் இந்த ஊரில் நம்மை எவனய்யா கவனிக்கி முன்? நம்ம மதிப்பை உணரமாட்டேன் என்கிருனு. களே!' எனும் குறைபாடு இப்பொழுது நீங்கிவிட்ட தாகவே தோன்றியது. அவருக்கு டிபன் காப்பி வகையருவும், வெற்றிலை பாக்குப் புகையிலேயும் தட்டில்லாமல் கிடைத்து வந்தன. ஆளுல் வண்டி இதே வேகத்தில் ரொம்பக் காலம் ஒட வில்லை!" சில மாதங்களுக்குத்தான் இந்த உற்சாகம், பர பரப்பு எல்லாம். புதுமைக் கவர்ச்சி மங்கிவிட்டது சீக்கி