பக்கம்:வீடும் வெளியும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 置器莎 கனக்குகளைக் குறித்து வைப்பது என்ற சிறுசிது அலு வல்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்துக்குக் கூட இருக்காது. சுந்தரத்தைப் பார்க்க வருகிறவர்களே வரவேற்று உபசரிப்பது, அவரைச் சந்திக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்குத் திருப்திகரமான பதில் சொல்வி அனுப்புவது, அவரோடு வெளியே போய் அவர் சந்திக்கின்றவர்களோடு நிகழும் உரையாடல்களைக் கவ னிப்பது இப்படி அநேக அலுவல்களும் அவனுக்கு இருந் தன. இவையே நாளில் பெரும் பகுதியை விழுங்கித் தீர்த்தன. ஆரம்பத்தில் இவை எல்லாம் புதுமையாகவும் வசீகரமான பொழுது போக்குப் போலவும் பட்டன காந்திக்கு. ஆணுல் நாளடைவில் இவையே தொந்தர வாகவும் பொறுத்து ஏற்றுக்கொள்ள வேண்டிய தண் டனை போலவும் தோன்றலாயின. ஆயினும், அவனுடைய அனுபவ ஞானம் விசாலமடைவதற்கும், பலரகமான மனிதர்களேக் கண்டு பழகவும் அவர்களுடைய குணங்களை பும் வாழ்க்கை முறைகளையும் தெரிந்து கொள்ளுவதற் கும் இவை துணைபுரிந்தன. உண்மையான் உலகத்தை' வாழ்க்கையின் நிர்வாணத்தன்மையை, சிறிது சிறிதாகப் புரிந்து கொள்வதற்கு இந்த உத்தியோகம் அவனுக்கு வாய்ப்பு அளித்தது. அந்த வகையில் காந்திக்கு நல்ல லாபமே. வாழ்வின் போக்கையும் மனிதர்களின் சுபாவங்களே பும் ஊன்றிக் கவனித்து வருகையில், அவனுக்கு ஏமாற்ற மும் வேதனையும். இதன் பலகை மனக்கசப்பும் வளரலா யின. அவனுடைய சிந்தனை, கனமும் கூர்மையும் பெற்றன. சுந்தரத்தைக் கண்டு பேசுவதற்குப் பலர் வந்தார் கள், முக்கிய விஷயமாகக் கலந்து ஆலோசிக்க வேண் டும் என்று கூறிக்கொண்டு சுந்தரம் பல பிரமுகர்களைச் சந்திக்கப் போளுர். எல்லோரும் கெளரவமான பெரிய மனிதர்கள். பணபலமும் வாழ்க்கை வசதிகளும் பெற்ற அவர்கள் பணத்தையும் பதவியையும்தான் கமதித்தார்கள் என்றும்! அவற்றுக்காக மனித மாண்பு