பக்கம்:வீடும் வெளியும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霊愛5 வீடும் வெளியும் கும் பேச்சுக்கும் ஜோராக இருக்கும். நடைமுறைக்குத் கட்டிவராதவை. மேலும் தலைவர்கள் மகாதமாதகளு என்று இருக்கிறவர்கள் இப்படி எதையாவது சொல்லிக் கொண்டுத்ான் இருப்பார்கள். எல்லோராலும் பின்பற்ற முடியாத அன்ருட் வாழ்க்கையில் அனுபவ சாத்தியம் ஆக இயலாத யோசனைகளையும், திட்டங்களையும் அவர் கள் சொல்வதனுலும், செய்ய முற்படுவதலுைம்தான் அவர்கள் மகாத் என்றும், மகாப் பெரியவர் என்றும் மதிக்கப்படுகிருர்கள். நாம் எல்லாம் சாதாரண மணி தர் கள். நாலுபேரு மதிக்கும்படியாக நடந்து வாழ்க்கை யில் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறவர் கள் தானே!” என்று அறிவித்தார். சுந்தரத்தின் பேச்சு காந்திமதிநாதனுக்கு அதிர்ச்சி திரவில்லை; ஆச்சர்யமாக மட்டுமே பட்டது. மகாத்மா வளர்த்த கட்சி இன்று இவர் போன்ற நபர்களே நம்பி வாழ நேரிட்டுள்ளதே! என்றுதான். ஒவ்வொரு முக்கிய விஷயத்திலும் சுந்தரத்தின் கருத்து அவனுக்குப் பிடிக்காததாகவே அமைந்தது. அவ துடைய மனச்சாட்சிக்கு மிகுந்த கஷ்டம் கொடுப்ப தாகவும் இருந்தது. காந்திமதிநாதன் உண்மையைப் போற்றி வளர்க்க ஆசைப்பட்டான். உண்மை பேசுவதில் ஆர்வம் காட்டி இன். அதனுல், உண்மைக்குப் புறம்பான பேச்சுகள் பெருமையாகப் பேசப்படுகிற போதும், உண்மையாக தடந்த ஒன்றை வேண்டு மென்றே திரித்துக் கூறுகிற போதும், அல்லது மறைக்க முயல்கையிலும், அவனுக்குச் சங்கடமாக இருந்தது. சில சமயம் கோபம் வரும், ஆத்திரம் உண்டாகும். . ஒரு சமயம் சுந்திரமும் பிரமுகர். ஒருவரும் ஏதோ ஒன்றைப் பிரமாதப் படுத்திப் பேசினர்கள். அது உண்மை அல்ல என்று காந்தி சுட்டிக்காட்ட விரும்பி ன்ை. ஆயினும், சுந்தரத்துக்கு நல்லவனுக நடந்து கொள்ள எண்ணி அந்த நேரத்துக்கு வர்ய்திறவாமல் இருந்து விட்டான். பிறகு, தனியாக, அவரிடம் அதைச் சொன்னன்.