பக்கம்:வீடும் வெளியும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤莎 வீடும் வெளியும் தில் சுந்திரத்தோடு நான் எவ்வளவு காலம் ஒத்துழைக்க முடியும் என்று எனக்கே புரியவில்லை. எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது!’ என்ற எண்ணமும் அவனுக்கு அவ்வப்போது உண்டாகத் தொடங்கியது. "சரி. வண்டி ஒடுகிறவரை ஒடட்டும். இப்பவே விணுக மனசைக் குழப்பிக் கொண்டிருப்பானேன்?” என்று அவன் தன்னைத் தேற்றிக் கொள்ளவும் தவற வில்லை, ஒவ்வொரு நாளும் அவனுடைய கொள்கைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் வேட்டு வைக்கும் விதத்திலே’ தமது எண்ண்ங்களையும் ஆசைகளையும் சுந்தரம் ஒலிபரப் பத் தவறுவதுமில்லை. 26. திருவாளர் புன்னைவனம்

தனிமனிதன் சிறப்பாக இருந்தால், சமூகம் சீர்பெற் றுச் சிறக்கும். தனிமனிதன் சிறப்புறுவதற்கு அவசிய மானவை என்று கருதப்பட்டு வந்த குணநலன்கள் சீர் கெட்டு, மதிப்பிழந்து போகுமானுல், சமூக வாழ்வும் நல னளியும். நாட்டின் மாண்பும் மயங்கிவிடும். சுதந்தரம் வந்ததற்குப் பிறகு தனிமனித மைேபாவத்தில் பெருத்த மாற்றம் காணப்படுகிறது. அது உயர்வுக்கான மாறுத லாக இல்லை. இதுவரை இருந்துவந்த பெருமைக்கு உரி யன என மதித்துப் போற்றப்பட்ட-நற்பண்புகளை நாசப் படுத்தும், சிதைத்துச் சீரழிக்கும் போக்கு ஆகவே தென் படுகிறது. இது வளர்ச்சிக்கு வகை செய்யாது. காந்திமதிநாதன் இவ்வாறு சிந்தித்தான். சுந்தரத் தின் சுபாவங்களும், அவரைக் காண வந்துபோன பெரிய மனிதர்கள், முக்கிய நபர்களின் பேச்சும் போக்கும் அவ னது சிந்தனையை இந்தக் கதியிலேயே வளர்த்தன. பண்பு நலத்தைவிட, பண வளத்துக்கு முக்கியத் துவம் கொடுப்பதில் மனித மனம் அதிக ஈடுபாடு காட்ட ஆரம்பித்து விட்டது. பணம்தான் முக்கியம். பணம்